எல்லாம் உங்களுடையதே

1.கொரி.3:21

என் பிரிய சகோதரரே, கேளுங்கள்: |தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரிவான்களாகவும் தம்மமிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின இராச்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா| இது என்ன விசித்திரம்! ஏழைகளாயிருந்தாலும் ஐசுவரியவான்கள்.  ஒன்றுமில்லாதவர்களாயிருந்தாலும் எல்லாமுடையவர்கள்.  சகலமும் நம்முடையதுதான்.  நம்முடைய உபயோகத்துக்கு, நம்முடைய பிரயோசனத்துக்கென்றிருக்கிறது.  நம்முடைய கையில் அது இராவட்டாலும் இன்னும் அவைகளை நாம் பிரயோசனமாக்கிக்கொள்ளலாம்.  அவைகளை நாம் பிரயோசனமாக்கிக்கொள்ளலாம்.  அனிமேல் நம்முடையதென்று கேட்டுப் பெற்றுக்கொள்ளவும், உடன்படிக்கையில் நமக்கு ஒப்புவிக்கப்பட்டு வாக்குத்தத்தங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது.  அவசரத்துக்கு வேண்டியதெல்லாம் அந்தந்த வேளையில் நமக்குக்கிடைக்கும்.  நாம் தேவனுக்குச் சுதந்தரர், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவோடு உடன் சுதந்தரர்.  நாம் இம்மைக்குரியவைகளைப் பார்த்தாலும், ; பரம காரியங்களைப் பார்த்தாலும், இனி வரப்போகிற காரியங்களைப் பார்த்தாலும், துன்பங்களைப் பார்த்தாலும், இன்பங்களைப் பார்த்தாலும், ப+மிக்குரியவைகளைப் பார்த்தாலும், பரலோகத்துக்குரியவைகளைப் பார்த்தாலும் சகலமும் நம்முடையதென்று நன்றாற்ச் சொல்லலாம்.  தேவன் நம்முடையவர், நம்முடைய பங்கு, இயேசு நம்முடையவர், நம்முடைய மணவாளன்.  பரிசத்த ஆவியானவர் நம்முடைய தேற்றரவாளன்.  ப+மி நம்முடையது, நம்முடைய நித்திய வீடு, நாம் இதை விசுவாசிக்கிறோமா? இவைகள் எல்லாம் உண்மை என்று எண்ணினதுபோல ஜீவனம் பண்ணி வருகிறோமா? இந்த இராத்திரியில் தலையணையின்மேல் தலைவைத்து சகலமும் என்னுடையது என்று உறுதியாய்ச் சொல்லக்கூடுமோ? அப்படியானால் |நான் உன் தரித்திரத்தை அறிவேன், ஆனாலும் நீ ஐசுவரியவான்| என்று அவர் நம்மைப்பார்த்து நன்றாய்ச் சொல்லலாம்.  உலகப் பொருள் போகினும் ஏதுமற்றவனுயினும் அவர் உன் பங்காமே அவர் உன் சொந்தமே.

என்னிடத்தில் வாருங்கள்

மத்.11:28

இயேசு உன்னைத் தமது ஆசனத்தண்டை அழைக்கிறார்;.  உன் விண்ணப்பத்தைக் கேட்க, உனக்கு உதவிசெய்ய, உன்னை ஆசிர்வதிக்க அவர் அங்கே காத்திருக்கிறார்.  நீ இருக்கிறபடியே அவரிடம் போய், உனக்கு வேண்டியதை எல்லாம் அவரிடத்தில் பெற்றுக்கொள்.  உன்னடிகளை நடத்த ஞானந்தருவார் உன் இருதயத்தைப் பாதுகாக்கச் சமாதானந் தருவார் அவர் சித்தத்தின்படிச் செய்யப் பெலன் தருவார்.  உங்கள் ஆத்துமாக்களைக் குற்றமற்றதாக்க நீதி தருவார்.  இந்த நன்மைகளை அவர் உனக்குக் கொடுப்பதினால் அவர் மகிமைப்படுகிறார்.  பணமில்லாமல், விலையில்லாமல் இவைகளைப் பெற்றுக்கொள்ள இன்று காலமே, இந்த நிமிஷமே உன்னைக் கூப்பிடுகிறார்.  இயேசு எவ்வளவு அருமையான ரட்சகர், எவ்வளவு பாசமுள்ள உத்தம சிநேகிதர்.  ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்ககடவோம் வாருங்கள்.  என்னிடத்திற்கு வாருங்கள் என்கிறார்.  உன்னண்டை செல்லாதே, உலகத்தண்டைபோகாதே, வெறுமையான பாத்திரங்களைப்;போன்ற சிருஷ்டிகளண்டை ஓடாதே.  என்னன்டையில் வா.  நீ கேட்பதிலும் நினைப்பதிலும் எவ்வளவோ அதிகமாக நான் உனக்குச் கிடைத்த வரப்பிரசாதங்களை விர்த்தியாக்குவேன்.  உன் பரிசுத்;தத்தை அதிகப்படுத்துவேன்.  என்னை மகிமைப்படுத்த நீ செய்யும் பிரயத்தனங்களை விருத்தியடையச் செய்வேன் என்;கிறார்.  ஆ, கர்த்தரே! உம்மைத் தேடுகிறவர்களுக்கும், மனுப்புத்திரர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவோ பெரிது! உம்முடைய வார்த்தை நம்பி பற்றிக்கொள்வோம் ஏசுவே! உம்முடைய உண்மைப்பற்றி காத்திருப்போம் கர்த்தரே! எங்களாவி உம்மைத்தேடி என்றும் உம்மைச் சாருமே.

விசுவாசியின் பிரசங்கம்

(1) சிறந்த வசனிப்போ, ஞானமோ காணப்படுவதில்லை. (1.கொரி.2:1-2)

(2) மனுஷ ஞானத்துக்குரிய நயவசனமுள்ளதாயிராது (1.கொரி..2:5,  கொலோ.2:8)

(3) ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்ட தேவஇரகசியங்களாயிருக்கும் (1.கொரி.2:5-7)

(4) பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாயிருக்கும் (1.கொரி.2:13,  லூக்.12:11-12)

(5) ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிப்பதாயிருக்கும் (1.கொரி.2:12-14 ,  2.பேது.1:20)

(6) உலக மனுஷ பார்வையில் பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கமாயிரக்கும் (1.கொரி.1:21)

(7) எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக்குகüறதாயிருக்கும் (கொலோ.1:28)

ஏழு விதமான நூல்கள்

(1) சிவப்பு நூல் – (ஆதி.38:28,30,  யோசு.2:17,  6:23,25)

(2) இளநீல நூல் – (யாத்.39:1)

(3) இரத்தாம்பர நூல் – (யாத்.35:25,  27:16,  39:1)

(4) பஞ்சு நூல்  – (யாத்.27:18)

(5) சணல் நூல்  – (லேவி.16:4,23,  2.சாமு.6:14)

(6) முப்புரி நூல் – (பிர.4:12)

(7) தூக்கு நூல் – (ஆமோ.7:7,  சக.4:10)

புத்துயிர்

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும் (1.யோ.1:7)

Sadhu Singh 

இளைஞன் ஒருவன் ஓர் உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து தவறிக் கீழே விழுந்துவிட்டான். உடல் முழுவதும் காயமுற்று இரத்தம் பெருக்கெடுத்ததால் அவன் மரணத்தருவாயிலிருந்தான். மருத்துவரும் தன்னால் எதுவும் செய்யவியாலது என்று கூறிவிட்டார். அவனது எலும்புகள் முறிந்திருந்தால் சரிக்கட்டலாம். நோய்வாய்ப்பட்டிருந்தால் மருந்து கொடுத்து சுகமாக்கலாம். ஆனால், அவன் இரத்தமனைத்தையும் இழந்துவிட்டான். இரத்தம் இல்லாவிட்டால் உயிரை இழப்பது நிச்சயம். உட்செலுத்தப்படவேண்டிய இரத்தம் என்னிடத்தில் இல்லையே என்று அங்கலாய்த்தார் மருத்துவர். என் மகனைக் காப்பாற்ற வழி இல்லையா என்று தந்தை கதறியபோது, யாராவது தனது இரத்தத்தைக் கொடுக்க, முன்வந்தால் அவன் உயிர்பிழைப்பான் என்றார் மருத்துவர். தன் மைந்தன் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பு காரணமாகத் தன் செர்த இரத்தத்தை அவனுக்காகக் கொடுத்தச் சித்தமானான் அத்தகப்பன். அவன் உடம்பிலிருந்த இரத்தம் மகனின் உடலுக்குள் செலுத்தப்பட்டது. சில மணி நேரத்திற்குள் முதியவனான அத்தகப்பன் பெலவீனமுற்று மரித்தான். ஆனால் மகன் பிழைத்துக்கொண்டான். தன்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, தன் மகனுக்கு வாழ்வளித்தது அத்தந்தையின் பேரன்பு. மலையிலிருந்து விழுந்து காயமுற்று இரத்தத்தை இழந்தவனைப்போல, நாமும் பரிசுத்தத்தின் உயிர்விலிருந்து பாவ் படுகுழியில் வீழ்ந்து ஆன்மீக வாழ்வை இழக்கிறோம். நமக்காக கிறிஸ்து தம புனித இரத்தத்தைச் சிலுவையில் சிந்தி நமக்குப் புத்துயிரூட்டினார்.

இரண்டுவித ஜனங்கள்

(1) நோவாவின் பேழைக்குள்ளே ஒரு சிறு கூட்ட ஜனங்கள், 8 பேர் மட்டும்.

பேழைக்கு வெளியே கீழ்ப்படியாத பெரும் கூட்ட ஜனங்கள். (1.பேது.3:20)

(2) கானான் தேசத்தை வேவு பார்க்க போனவர்களில் நற்செய்தி சொன்னவர்கள் இரண்டு பேர்.

வேவு பார்த்தவர்களில் துர்ச்செய்தி சொன்னவர்கள் பத்துப் பேர். (எண். அதி.13)

(3) சிமியோனும், லேவியும் ஏகசகோதரர்களுள் கோபமும் மூர்க்கமும் உள்ளவர்கள், அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். (ஆதி.49:5-7).

செபுலோனும் நப்தலிலும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள் (நியா.5:18)

(4) நகோமியின் இரண்டு மருமகன்களில் ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டபின் மோவாபுக்குத் திரும்பிப்போய்விட்டாள்.

ரூத்தோ நகோமியை விடாமல் பற்றிக்கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டாள் (ரூத் அதி.1)

(5) பத்துக் கன்னிகைகளில் புத்தியுள்ளவர்கள் ஐந்து பேர்.

புத்தியில்லாதவர்கள் ஐந்து பேர். (மத்.அதி.25)

(6) வலையில் உள்ள நல்ல மீன்கள் கூடையில்.

கெட்ட மீன்கள் வெளியே எறியப்படும். (மத்.13:47-50)

(7) லாசரு மரித்தபின் ஆபிரகாமின் மடியாகிய பரதீசுக்குச் சென்றான்.

ஐசுவரியவான் மரித்தபின் வேதனையுள்ள பாதாளத்துக்குச் சென்றான் (லூக். அதி.16)

(8) இரட்சிக்கப்பட்டவர்களுக்கு பரலோகம்.

இரட்சிக்கப்படாதவர்களுக்கு நரகம் (எபி.2:2-4)

(9) வீடு கட்டும்போது புத்தியுள்ளவன் கற்பாறையில் அஸ்திபாரம் போட்டு கட்டுகிறான்.

புத்தியில்லாதவன் மணலின்மேல் அஸ்திபாரம் போட்டு கட்டுகிறான்.

(10) யோவான் ஸ்நானனுடைய பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்று தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டவர்கள், ஆயக்காரரும் வேசிகளும் (மத்.21:31,32).

(11) இடுக்கமும் நெருக்கமுமான வழியில் நடப்பவர்கள் சிலர்.

விசாலமான வழியில் நடப்பவர்கள் அநேகர் (மத்..7:13-14)

(12) நியாயத்தீர்ப்பு நாளில் செம்மறியாடுகள் வலது பக்கம்.

வெள்ளாடுகள் இடது பக்கம் (மத்.25:32-34)

 சிநேகிதனே ! நீ இதில் எந்தக் கூட்டத்திலிருக்கிறாய் என்பதை இப்போதே தீர்மானித்துக்கொள்.

ஜீவனுள்ளோருக்குத் தேவன்

மத்.22:15-33

எவருக்கு?: பரிசேயரின் சீடரும் ஏரோதியரும் கூடி வந்து இயேசுவைக் குற்றப்படுத்த முயன்றும், இயேசு இவர்களைத் தோல்வியுறச் செய்வது மட்டுமல்லாது.  ஆழமான உண்மையைக் கற்பிக்கிறார்.  இயேசுவின் அடியவர் இம்மண்ணலகில் வாழும் விண்ணலகிற்கு உரியோர்.  எனவே, இரு உலகிற்குமுரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியோர்.  இவ்விரு உலகையும் பிளந்து பிரிக்காமல், வேறுபடுத்திக் காட்டுகிறார், இயேசு எதற்கு?: சதுசேயர் உயிர்த்தெழுதல், தேவதூதர் ஆவிகள் இவற்றின் உண்மையை நம்புவதில்லை (அப்.  23:8).  இப்பொருள் உலகை மட்டும் ஏற்றுக்கொள்ளவர்.  உபா.  25:5-ஐக் கூறி, ஏழு சகோதரருக்கும் மனைவியாயிருந்த பெண்ணின் பிரச்சனையைக் கிளப்புகின்றனர்.  சதுசேயர் உயிர்த்தெழுதலைக் குறித்த வேதவாக்கியங்களையும் சரிவர அறியவில்லை, உயிர்த்தெழுந்த வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது.  இப்பூவுலக வாழ்வைப் போன்றதன்று.  மேலும், இப்பூவுலகை விட்டு மறைந்துவிட்ட முன்னோர், கடவுளோடு கொண்டுள்ள உறவினால் உயிர்பெற்று நீடியவாழ்வு வாழ்கின்றனர்.  எனவே, இப்புவியின் வாழ்வைக் கொண்டே நாம் விண் வாழ்வைக் கணிக்க இயலாது என்று இயேசு போதிக்கிறார்.

இயேசு ஒரு நியாயாதிபதியாயிருப்பார்

முன்னுரைப்பு: ஏசாயா 32:22

Jesus

கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.

நிறைவேறுதல்: யோவான் 5:30

நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை.  நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

2.தீமோ.4:1

நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:

இன்னும் பல வேதவாக்கியங்களின்மூலம் இயேசுவே உலக மக்களை நியாயந்தீர்ப்பாா என்று காண்கிறோம். அவையாவன:

இயேசு கிறிஸ்து கூறியது:

(1) யோவான் 5:22: அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

(2) மத்தேயு 16:27: மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார். அப்பொழுது, அவனவன்  கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

(3) மத்தேயு 25:31-45: அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.  அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன்,  எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்@ தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள். அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள். வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள். வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள். காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.  அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.  பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை. அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை. வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை. வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.  அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 

 பரிசுத்த பவுல் கூறியது:

அப்போஸ்தலர் 17:31: மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார். அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்…..

இவ்விதமாக இயேசு கிறிஸ்து உலக நியாயாதிபதியாக வருவார் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டு சிந்தைகள்

ரோ.8:1-11

மாம்ச சிந்தை என்றால் பவுல் குறைவுகள் நிறைந்த மனித இயல்பு என்ற பொருளில் எழுதுகின்றார்.  நம் கண்ணோட்டம் தேவன் சிந்திப்பதுபோல் நோக்கு உடையதாய் உள்ளதா அல்லது எல்லோரைப்போல் உலகைச் சார்ந்ததாக உள்ளதா? கிறிஸ்துவின் மீட்புச் செயல் நம்மில் இருந்த குற்ற உணர்வை நீக்கி விட்டது.  இது துவக்கம்.  இங்கு திருப்தி அடையாமல், நாம் புத்தியுள்ளவர்களாகத் தொடர்ந்து கட்டுவோம்.  கடைசி மட்டும், ஆண்டவர் வருமளவும்.  உருவாகவேண்டியது ஆவிக்குரிய சிந்தை, ஆவியின் பண்பு.  ஆவியானவரால் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வு, இது கிறிஸ்துவை மையமாகக் கொண்டது.  கடவுளை முன்னிட்ட வாழ்வு என்றும் கூறலாம்.  நம்மிடம் உள்ளதோ உலக (மாம்ச) சிந்தை.  இப்புது வாழ்வு தேவனின் வாக்கும் வரமும் ஆகும்.  உலகக் கண்ணோட்டமும் ஆவிக்குரிய மனப்பாங்கும் எதிரெதிராய் உள்ளன.  நாம் இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்றிருக்க முடியாது.  ஆவியானவர் நம்மில் நிறையும்படித் தேவனுக்கென்று தீர்மானம் செய்வோம்.  சாத்தானிடம் ‘நான் கிறிஸ்துவின் சொந்தம்” என்போம்.  வெற்றி நமதே!

தனிமையில் ஜெயம்

(1) ஏனோக்கு: தேவனோடு தனியாக 300 வருஷம் சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.5:21-24,  எபி.11:5,  யூதா 14-15)

(2) நோவா: பேழையைக் கட்டும்போது தனிமையாயிருந்தான். அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.6:11-12,  2.பேது..2:5)

(3) யோசேப்பு: தன் சகோதரர்களால் அடிமை வியாபாரிகளிடம் விற்கப்படும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (ஆதி.37:19-28,36,  39:1-23,  41:38,  49:22,  சங்.105:17-22,  எபி.11:22)

(4) மோசே: மோசே சீனாய் மலையில் 40 நாள் புசியாமலும் குடியாமலும் இருந்தபோது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (யாத்.24:15-18,  34:1-2,28,  உபா..9:9,11,18,  யாத்.33:11,  எபி.11:23-28)

(5) சிம்சோன்: பெலிஸ்தரின் 1000 பேரை கழுதையின் தாடை எலும்பால் சங்கரிக்கும்போது 300 நரிகளைப் பிடித்து வாலோடு வால் சேர்க்கும்போதும் தனிமையாயிருந்தான். ஆனால் அப்போது அவன் ஜெயம் பெற்றான். (நியா.15:3-5,  15-17)

(6) எலியா: கர்மேல் பர்வதத்தில், வானத்திலிருந்து அக்கினி இறங்கி வரப்பண்ணினபோது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (1.இராஜா. 18::24-40)

(7) தாவீது: கோலியாத்துடன் யுத்தத்திற்குச் சென்றபோது தனிமையாக இருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (1.சாமு.17:34-55).

(8) யோபு: சொத்து சுகமிழந்து, மக்கள் எல்லாம் இழந்து, சிநேகிதரால் பரியாசம்பண்ணப்பட்டு, மனைவியால் வெறுக்கப்படும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (யோபு 1:13-22, 2:10)

(9) எரேமியா: உளையான துரவில் இறக்கிவிடப்பட்டு அமிழ்தினபோது தனிமையாயிருந்தான். ஆனால் ஜெயம் பெற்றான். (எரேமி.38:6-13)

(10) தானியேல்: சிங்ககங்களின் கெபியில் போடப்பட்டு தனிமையாக இருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான்.. (தானி.6:5-28)

(11) யோனா: நினிவேக்கு பிரசங்கிக்க சென்றபோது தனிமையாயிருந்து அந்தப் பட்டணத்தார் எல்லாரையும் மனந்திரும்பப் பண்ணினான். அப்படியே அவன் ஜெயம் பெற்றான். (யோனா 3:1-10)

(12) இயேசு கிறிஸ்து: நியாயம் விசாரிக்கப்படும்போதும் சிலுவையில் அறையப்படும்போதும் தனிமையாயிருந்தார். ஆனால் அவர் ஜெயம் பெற்றார். (மத்.27:27-50,  மாற்.15:37,  லூக்.23:46)

(13) பேதுரு: சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (அப்.12:3-17)

(14) பவுல்: நல்ல போராட்டத்தைப் போராடி, ஓட்டத்தை முடிக்கும்போது தனிமையாயிருந்தான். ஆனால் அவன் ஜெயம் பெற்றான். (2..தீமோ.4:7-8,  2.கொரி.2:14,  1.கொரி.15:57).

 

ஏழு வித ஐசுவரியம்

(1) இரக்கத்தில் ஐசுவரியம் – (எபேசி.2:4)

(2) கிருபையின் ஐசுவரியம்  – (எபேசி.1:7)

(3) மகிமையின் ஐசுவரியம் – (ரோ.9:23)

(4) தேவனுடைய ஐசுவரியம் – (ரோ..11:33,  எபேசி.3:8)

(5) நிலையற்ற ஐசுவரியம்  – (1.தீமோ.6:17)

(6) விசுவாசத்தில் ஐசுவரியம் – (யாக்.2:5)

(7) நற்கிரியைகளில் ஐசுவரியம் – (1.தீமோ.6:18)

இயேசு ஒரு ஆசாரியனாயிருப்பார்

முன்னுரைப்பு: சங்கீதம் 110:4

Jesus

நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார். மனம் மாறாமலுமிருப்பார்.

சகரியா 6:12-13

……. சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும். அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார். தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார். இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.

 நிறைவேறுதல்: எபிரெயர் 3:1

இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்.

எபிரெயர் 5:5-6

அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராயிருக்கிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை. நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார். அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று  சொல்லியிருக்கிறார்.

ஒரு ஆசாரியன் தன் ஜனத்தின் பாவங்களுக்காக பலி செலுத்தி ஆண்டவரிடம் பரிந்து மன்றாடுவதுபோல இயேசு கிறிஸ்து உலக மக்களுக்காக தம்மையே பலியாக ஒப்புக் கொடுத்து ஆண்டவரின் வலது பாரிசத்திலிருந்துகொண்டு நமக்காகப் பரிந்து பேசும் ஆசாரியராயிருக்கிறார். இப்படியாக தாவீது, சகரியா முதலியவர்கள் மூலமாய் முன்னுரைக்கப்பட்டவைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்.

ஆடு

நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். (யோ.10:11)

Sadhu Singh

 நூற்றுக்கணக்கான ஆடுகளுடைய ஒரு மனிதன் இருந்தான். ஒருநாள் சில ஆடுகள் காணாமற்போனபோது அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு தன் பணியாட்களிடம் கூறினான். ஆனால், கொடிய மிருகங்களுக்கு அஞ்சி அப்பணியாட்கள் ஆடுகளைத் தேடிப்போகத் தயங்கினார்கள். ஆகையால், அந்த எஜமான் தானே போய்த் தன் ஆடுகளை மீட்டுவரத் திட்டமிட்டான். தான் இருக்கும்வண்ணமாகப்போனால், ஆடுகள் தன்னைப் புரிந்துகொள்ளமாட்டா என்று எண்ணினான். ஆடுகளுக்குத் தங்களை மேய்ச்சலுக்கு அழைத்தச் செல்லும் பணியாட்களைத்தான் தெரியும். ஆகவே, தானும் ஒரு ஆட்டைப்போல் தோற்றமளித்தால், ஆடுகள் தன்னை ஏற்றுக்கொண்டு தனக்குக் கீழ்ப்படியும் என்று அம் மனிதன் நினைத்தான். எனவே, அவன் ஒர் ஆட்டுத்தோலைத் தன்மீது போர்த்திக்கொண்டு, ஆட்டைப்போல் உருவமெடுத்து ஆடுகளைத் தேடிச் சென்றான். அவ்வாறு சென்றதால் ஆடுகள் யாவும் பத்திரமாய்த் திரும்பி வந்தன. இதைக் கண்டு மகிழ்ந்த அம்மனிதன், தன் வேடத்தைக் கலைத்தான். காணாமற்போன ஆடுகளைக் காப்பாற்ற மனிதன் ஆட்டைப்போலானான். ஆடுகள்மீது அவனுக்கிருந்த அன்பினாலே அவ்வாறு செய்தான். இயேசு கிறிஸ்துவும் இவ்வாறே பாவிகளை மீட்க மனிதனாக அவதரித்தார்.

புதிய ஏற்பாட்டில் ஏழு பிரதான கேள்விகள்

(1) நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்? லூக்.18:18,  மத்.19:16,  மாற்.10:17

 (2) மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? (லூக்.9:25,  12:15,  16:19,  18:24-25)

 (3) ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ? (அப்.16:30-31)

(4) ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்திமாயிருக்கிறீர் (அப்9:6)

(5) அப்பொழுது, மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன? (அப்.8:36-38,  22:16)

 (6) நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? (அப்.19:2,  8:14-17)

(7) வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள் (வெளி 7:13-14,  வெளி 3:4-5,  பிர.9:8,  சக.3:1-5)

இராஜ்யத்தின் வாழ்வு

மத்.18:10-20

வழிதவறி அலைவோர்: இயேசுவின் அடியவரில் மிகச் சிறியோரின ஆவிக்குரிய பிரதிநிதிகள் (தேவதூதர்) இராஜாவின் சமுகத்தை எளிதில் அடைகிறார்கள்.  எனவே, அச்சிறியோரை இழிவாக நடத்துவது ஏன்? (வ. 10) சிதறிப்போன பலவீனமான அடியவரை நாம் எவ்வாறு நடத்துவது என்பதைக் குறித்து வ. 11-14 ல் என்ன கற்கிறோம்? தவறி அலைவோரைத் தேடுவதில் எவ்வளவு அக்கறை செலுத்துகிறோம்?வ.  15-2 – லும் தவறி அலையும், குற்றஞ்செய்யும் அடியவரைக் குறித்தே காண்கிறோம்.  வ. 15ல் காணப்படும் குற்றம் பாவமல்ல, சகோதரனுக்கு விரோதமான பிழை.  நமது கூட்டுறவு, சபை, சங்கங்களில் குற்றத்தைக் கண்டிக்க வேதநெறியைப் பின்பற்றுகிறோமா? நாம் கண்டிக்க அஞ்சாது, வேதநெறியைப் பின்பற்ற கருணை கொண்டுள்ளோமா? வ.  18 – கட்டுப்பாட்டை நிலை நிறுத்த, கட்டவிழ்க்கும், கட்டம் பொறுப்பும் அதிகாரமும், தங்கள் சுய தீர்ப்பைக் கூறாமல், கூட்டுறவின் ஜெபத்தில் ஆண்டவரின் திருவுளத்தை அறிவோருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

புதையல்

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்: (லூக்.18:1)

Sadhu Singh

இரண்டு புதல்வர்களுடைய தந்தையொருவன் இருந்தான். அவன் தன் மக்களையழைத்து நமது வயலில் ஒரு பெரும் புதையல் இருக்கிறது. உடனே அதைத் தோண்டி எடுங்கள் என்று கட்டளையிட்டான்.  அவ்விருவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். தங்கமும் வெள்ளியும் நிலத்தில் புதையுண்டு கிடக்கிறது. அகழ்ந்து அவற்றை எடுப்போம் என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அந்த தந்தை கூறியதின் பொருள் அதுவல்ல. அந்தக் கிராமத்தில் தண்ணீர் வசதியில்லாதிருந்தது. மூன்று மைல்களுக்கப்பாலிருந்து நீர் கொண்டு வரவேண்டும். இரு ககோதரர்களும் தினந்தோறும் விடாது நிலத்தைத் தோண்டலானார்கள். தகப்பன் அவர்களை ஊக்குவித்தான். மனந்தளராமல் தோண்டுங்கள். மிகவும் அருமையானதைக் கண்டுபிடிப்பீர்கள் என்று ஆர்வம் புகட்டினான். சில நாட்கள் கழிந்த பின் சகோதரர் இருவரும் களைப்புற்று மனம் சோர்ந்தனர். எல்லாம் வீண், தங்கமும் வெள்ளியும் கிடைத்தால்கூட நாம் தாகத்தால் மடிந்துவிடுவோம். தண்ணீரே தங்கத்தைவிட அரியது என்று புலம்ப ஆரம்பித்தனர். அச்சயம் திடீரென்று ஆழத்திலிருந்து ஒரு நீரூற்று சுரந்தது. சகோதரர்கள் ஆனந்தக் கூத்தாடினர். தந்தையிடம் ஓடிச் சென்று விவரமறிவித்தனர். தண்ணீருக்காக நிலத்தைத் தோண்டும்படி உங்களிடம் நான் கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்திருக்கமாட்டீர்கள். மற்றவர்கள் உழைக்கட்டும் என்று மறுத்திருப்பீர்கள்.  புதையலிருப்பதாகச் சொன்னபடியால்தான் உடனே போனீர்கள். பொன்னுக்காக நீங்கள் போனாலும் பொன்னைவிட அரிய பொருளைக் கண்டுபிடித்தீர்கள் என்று அத் தந்தை கூறினான்.

ஜெபம் என்பது நிலத்தைத் தோண்டுவது போன்ற ஒரு பயிற்சி. மனிதனின் ஆன்மீக வாழ்வை அது சிறப்புச் செய்கிறது.

இராஜ்யத்தின் மேன்மை

மத்.13:44-58

அனைத்திற்கும் மேல்: கடவுள் இராஜ்யத்தைக் கண்டோர் அதன் ஆசிகளைப் பெற அனைத்தையும் விட்டுக் கொடுப்பார். வ. 52-இயேசுவின் சீடன் இராஜ்யத்துக்கடுத்தவைகளை அறிந்தவன்.  அவன் இயேசுவை அறியும் அறிவென்னும் பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் கொடுக்கிறான். புதியவை – நிறைவேற்ற வந்த கிறிஸ்து வெளிப்படுத்துகிறவை. பழையவை – இப்பொழுது வெளிப்படுத்தப்பட்ட இதுவரை மறைத்திருந்த கடவுளின் அநாதித்திட்டம் (எபேசி 3:1-6). அவனைவரையும் போன்றவர்: இயேசு தம் கலிலேயப் பணியை நாசரேத்தில்தான் தொடங்கினார் (லூக் 4:16-30).  ஆனால், தள்ளப்பட்டார்.  இம்முறையும் நாசரேத்தூரார் இயேசு தங்களில் ஒருவர்தானே என்று அவரை விசுவாசிக்கவில்லை.  அவரது அறிவையும் வல்லமையையும் கண்டு வியந்தனரே ஒழிய ஏற்றுக்கொள்ளவில்லை எனவே, நம்பிக்கை கொள்ளாதோர் மத்தியில் நம்பிக்கையை உண்டாக்க அற்புதங்களைச் செய்யவில்லை.  இயேசு கடவுளின் வல்லமையையும் வருகையையும் ஏற்றுக் கொள்ளா இருதயக் கடினம் உண்டா, எனக்கு?

பந்தய சாலையில் ஓடுகிறவர்கள்

Läufer 

1. ஓடவேண்டிய வழி:

(1) பூர்வ வழி (ஏரேமி.6:16)

(2) ஜீவ வழி (எரேமி.21:8)

(3) இடுக்கமான வழி (மத்.7:13-14)

(4) சத்திய வழி (யோ.14:6)

(5) பரிசுத்த வழி (ஏசா.35:8)

(6) உபத்திரவங்களின் வழி (அப்.14:22)

(7) சீயோனுக்குப் போகிற வழி (எரேமி.50:5)

2. ஓடவேண்டிய விதம்:

(1) தன் அரையைக் கட்டிக்கொண்டு (1.இராஜா.18:46,  எபேசி.6:14,  ஏசா.11:5,   1.பேதுரு.1:13,  எரேமி.13:1-2,  மத்.3:4,   அப்.13:25

 (2) இச்சையடக்கத்தோடு (1.கொரி.9:25,  2.தீமோ.2:22,  3:6,  தீத்து 2:12,   1.பேது.1:14,  2:11,   ரோ.13:14, 

(3) பின்னானவைகளை மறந்து  (பிலி.3:12-14,  அப்.20:24)

(4) பாராமான யாவற்றையும் பாவத்தையும் தள்ளிவிட்டு (எபி.12:1)

(5) இயேசுவை நோக்கி (எபி.12:1,  3:1)

(6) பொறுமையோடே (எபி.12:1)

(7) கர்த்தருடைய கற்பனைகளின் வழியாக (சங்.119:32)

3. ஓட்டத்தினால் கிடைக்கும் பலன்:

(1) வாடாத கிரீடம் (1.பேது.5:4)

(2) நீதியின் கிரீடம் (2.தீமோ.4:7-8)

(3) மகிழ்ச்சியின் கிரீடம் (1.தெச.2:19,  பிலி.4:1)

(4) அழிவில்லாத கிரீடம் (1.தெச.9:25)

(5) மகிமையின் கிரீடம் (1.கொரி.9:25)

(6) அலங்காரமான கிரீடம் (ஏசா.2:7,  நீதி.4:9,  16:31)

(7) ஜீவ கிரீடம் (யாக்.1:12,  வெளி 2:10)

நீ என்ன செய்கிறாய்?

(1) நோவாவே நீ என்ன செய்கிறாய்?

இரட்சிப்பின் பேழையைச் செய்கிறேன் (ஆதி.6:14-22)

(2) கிதியோனே நீ என்ன செய்கிறாய்?

தோலை கசக்கி அதிலிருந்து பனிநீரைப் பிழிகிறேன் (நியா.6:38)

(3) நெகேமியாவே நீ என்ன செய்கிறாய்?

பழுதாய்ப்போன அலங்கத்தைக் கட்டுகிறேன் (நெகே.2:18,20)

(4) சாலோமோனே நீ என்ன செய்கிறாய்?

கர்த்தருக்கு மகிமையான ஆலயம் கட்டுகிறேன் (2.நாளா.3:1)

(5) உசியாவே நீ என்ன செய்கிறாய்?

தேவாலயத்தில் தூபங்காட்டுகிறேன் (2.நாளா.26:15-21)

(6) ஆமோசே நீ என்ன செய்கிறாய்?

காட்டத்திப் பழங்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கிறேன் (ஆமோஸ் 7:14-15)

(7) ஆமானே நீ என்ன செய்கிறாய்?

யூதரை அழிக்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன் (எஸ்.5:14, 7:4)

(8) அன்னாளே நீ என்ன செய்கிறாய்?

கர்த்தர் சமூகத்தில் என் இருதயத்தை ஊற்றிக்கொண்டிருக்கிறேன் (1.சாமு.1:15)

(9) கொர்நேலியுவே நீ என்ன செய்கிறாய்?

எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன் (அப்.10:2)

(10) பிலோமோனே நீ என்ன செய்கிறாய்?

பரிசுத்தவான்களுடைய உள்ளங்களை இளைப்பாறச் செய்துகொண்டிருக்கிறேன் (பிலோ.7)

அன்பனே! சகோதரனே! நீ என்ன செய்கிறாய்?

பாவம் என்னும் பாம்பு

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோ.10:10)

Sadhu Singh

Sadhu Singhநீண்ட காலமாய் நோய்வாய்ப்பட்ட மனிதன் ஒருவன் இருந்தான். தன் பலத்தை எல்லாம் இழந்து பலவீனப்பட்டிருந்த அவனுக்கு மிகச் சில வாழ்நாட்களே எஞ்சியிருந்தன. ஒருநாள் அவன் தனிமையில் படுத்திருந்தபோது தன்னை ஒரு பாம்பு நெருங்கி வருவதைக் கண்டான். தன் உயிரைக் காத்துக்கொள்ள அவன் விரும்பினாலும் அவனால் முடியவில்லை. அவனுக்குள் உயிர் இருந்தது. ஆனால் அந்த உயிரினால் பலனில்லை. ஒரு கல்லை எடுத்து வீசி அம்பாம்பைக் கொல்ல அவனுக்குச் சக்தியில்லை. பாம்பு வருவதைப் பார்த்து அஞ்சி நடுக்கத்தான் அவனால் முடிந்தது.  அது அவனைத் தீண்டிய சிறிது நேரத்திற்குள் அவன் வாழ்வு முடிந்தது. அதன்பின் அவனுடைய உறவினன் ஒருவன் வந்து அப்பாம்மை அடித்துக்கொன்றான். அவன் பலசாலியாக இருந்ததால் அப் பாம்மைக் கொல்ல அவனால் முடிந்தது. கிறிஸ்தவர் அநேகர் உயிர்பெற்றிருக்கிறார்கள். ஆனால் பாவம் என்னும் நச்சுப்பாம்பைக் கொல்லும் சக்தி அவர்களுக்கில்லை. பெலனில்லாத உயிரினால் பலனில்லையே? இதன் விளைவாக சாத்தான் எனப்படும் பகைவன், பாவம் என்னும் விஷத்தால் தீண்டி அவர்களைக் கொன்று போடுவான்.. நமதாண்டவரோ ஜீவனை மட்டுமல்ல, பரிபூரண ஜீவனைத் தருவதாக வாக்களித்திருக்கிறார். பரிபூரண ஜீவனைப் பெற்றிருப்போர் பாவம் என்னும் பாம்பைக் கொல்லும் சக்தியுடையோர் !