துரோகத்துக்கு உடந்தை
2024 மே 1 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,26 முதல் 27 வரை) “சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்” (வசனம் 27). அதோனியாவின் சூழ்ச்சிக்கு ஆசாரியனாகிய அபியத்தார் உடந்தையாயிருந்ததினிமித்தம் சாலொமோனால் அவன் தண்டனை அடைந்தான். கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்தில் பணிபுரிகிற ஆசாரியன் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட ராஜாவுக்கு விரோதமான சூழ்ச்சியில் பங்குபெற்ற செயலானது அவன் கர்த்தருக்கு மட்டுமின்றி, அந்தப் பதவிக்கும் உண்மையற்றவனாக இருந்தான் என்பதைக் காட்டுகிறது. முன்னொரு காலத்தில் அப்சலோம் தந்தைக்கு விரோதமாக எழும்பியபோது இந்த அபியத்தார்…