நம்பிக்கெடுதல்
2024 ஜனவரி 11 (வேத பகுதி: 2 சாமுவேல் 4,1 முதல் 12 வரை) “இன்றைய தினம் கர்த்தர் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் குடும்பத்தாரின் கையிலும் பழிவாங்கினார் என்றார்கள்” (வசனம் 8). அப்னேர் எப்ரோனிலே செத்துப்போனதைச் சவுலின் குமாரன் கேட்டபோது, அவன் கைகள் திடனற்றுபோயிற்று; இஸ்ரவேலரெல்லாரும் கலங்கினார்கள் (வசனம் 1). அப்னேர் இஸ்போசேத்துக்கு மட்டுமின்றி, முழு இஸ்ரவேல் மக்களுக்கும் எந்த அளவுக்கு நம்பிக்கையாக இருந்தான் என்பது இதன் மூலம் புலனாகிறது. இதனாலேயே தாவீதும்…