இருமனதின் தீமைகள்
2024 ஏப்ரல் 25 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 1,38 முதல் 53 வரை) “இதோ, அதோனியா … பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, இருக்கிறான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.” (வசனம் 51). தாவீது ராஜாவின் ஒப்புதலுடன், அவனுடைய பிரதான அதிகாரிகள் மற்றும் மெய்க்காவலர்களின் தலைமையில், மக்களின் ஆதரவுடன் விமர்சையான வகையில் அடுத்த மன்னராக சாலொமோன் முடிசூட்டப்பட்டான். “மன்னர் வாழ்க”, “கர்த்தர் மன்னரை ஆசீர்வதிப்பாராக” என்னும் கோசங்கள் விண்ணையும் மண்ணையும் பிளந்தன. இந்தச் சத்தம் போலி ஆதரவாளர்களுடன் தனக்குத்…