May

ஒப்புவித்தலின் வாழ்க்கை

2024 மே 5 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,4) “அப்படியே ராஜா, பலியிட கிபியோனுக்குப் போனான்” (வசனம் 4). சாலொமோனின் செயல்களில் இன்றியமையாத காரியங்களில் ஒன்று, அவன் ஆட்சிக்கு வந்த புதிதில் கிபியோனுக்குச் சென்று கர்த்தருக்குப் பலி செலுத்தியதாகும். எருசலேமிலிருந்து ஏறத்தாழ இருபது மைல் தொலைவில் உள்ள கிபியோனுக்கு தன்னுடைய பரிவாரங்களோடு சென்று கர்த்தருக்குப் பலி செலுத்தினான். இருபது மைல் பயணத்தின் பிரயாசம், செலுத்தப்பட்ட ஆயிரம் பலிகள் ஆகியவை சாலொமோனின் இருதய வாஞ்சையையும் கர்த்தருக்கு அதிகமாகக்…

May

சமநிலை வாழ்க்கை

2024 மே 4 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 3,1 முதல் 3 வரை) “சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி …” (வசனம் 1). இந்த அதிகாரம் சாலொமோனின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறது. சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடன் ஒப்பந்தம் செய்து, பார்வோனின் மகளை மணந்தான். அண்டை நாட்டு அரச குடும்பத்துடன் சம்பந்தங்கலப்பது அல்லது திருமணம் செய்துகொள்வது பண்டைய உலகில் ஒரு பொதுவான அரசியல் உத்தியாக இருந்தது. ராஜ குடும்பத்தினர்…

May

அலட்சியம் வேண்டாம்

2024 மே 3 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,36 முதல் 46 வரை) “நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாதே போனதென்ன?” (வசனம் 43). சீமேயி சவுல் அரசனின் உறவினன். இவனுக்குப் பின் தாவீது அரசாண்டதை விரும்பாதவன். தாவீது அப்சலோமுக்குத் தப்பி ஓடிப்போகையில் பின்னாகவே வந்து அவனைத் தூசித்தவன் இவன். இவன் நிம்மதியாக மரணமடையக் கூடாது என்று தாவீது சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியால், சாலொமோன் அவனை அழைத்து எருசலேமைவிட்டு எங்கும் போகக்கூடாதென்று வீட்டுக்…

May

புகலிடம் சேர ஆசிப்போம்

2024 மே 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,28 முதல் 35 வரை) “யோவாப் அப்சலோமின் பட்சம் சாயாதவனாயிருந்தும், அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தான்” (வசனம் 28). அதோனியாவுக்கும் அபியத்தாருக்கும் சாலொமோன் தண்டனை வழங்கிய செய்தி யோவாபை எட்டியது. இது அவனது இருதயத்தில் திகிலை உண்டாக்கியது. சாலொமோனின் அடுத்த குறி நான் தான் என்பதை அவன் புரிந்துகொண்டான். தன்னுடைய பழைய குற்றச் செயல்களுக்காக தாவீதிடம் தண்டனை பெறாமல் தப்பித்தாலும், அதோனியாவுக்கு ஆதரவளித்தது தன்மீது விழுந்த குற்றம் என்று…

May

துரோகத்துக்கு உடந்தை

2024 மே 1 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,26 முதல் 27 வரை) “சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்” (வசனம் 27). அதோனியாவின் சூழ்ச்சிக்கு ஆசாரியனாகிய அபியத்தார் உடந்தையாயிருந்ததினிமித்தம் சாலொமோனால் அவன் தண்டனை அடைந்தான். கர்த்தருடைய ஆசரிப்புக்கூடாரத்தில் பணிபுரிகிற ஆசாரியன் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட ராஜாவுக்கு விரோதமான சூழ்ச்சியில் பங்குபெற்ற செயலானது அவன் கர்த்தருக்கு மட்டுமின்றி, அந்தப் பதவிக்கும் உண்மையற்றவனாக இருந்தான் என்பதைக் காட்டுகிறது. முன்னொரு காலத்தில் அப்சலோம் தந்தைக்கு விரோதமாக எழும்பியபோது இந்த அபியத்தார்…

April

துரோகத்தின் முடிவு

2024 ஏப்ரல் 30 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,22 முதல் 25 வரை) “என்னை என் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டுவித்தவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” (வசனம் 24). அதோனியா தாவீதின் இறுதிக்கால விதவை மனைவியைக் கேட்டது, இஸ்ரவேலின் சிம்மாசனத்தைச் சொந்தம் கொண்டாடும்படியான முயற்சி என்பதை சாலொமோன் நன்றாகப் புரிந்துகொண்டான். தான் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டவன் என்னும் உறுதி சாலொமோனுக்கு இருந்ததால் அதோனியாவின் செயல் கர்த்தருக்கு விரோதமானது எனக் கண்டு,…

April

துரோகத்தின் எழுச்சி

2024 ஏப்ரல் 29 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,13 முதல் 21 வரை) “அதற்குப் பத்சேபாள்: நல்லது, நான் உனக்காக ராஜாவிடத்தில் பேசுவேன் என்றாள்” (வசனம் 18). சாலொமோனின் ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது என்று சொல்லப்பட்ட பிறகும் (வசனம் 12), அதன்மேல் அதோனியாவுக்கு ஒரு கண் இருந்தது. கிறிஸ்துவுக்குள்ளாக நம்முடைய ஸ்தானத்தை இழந்துபோகச் செய்யும்படி சாத்தான் எப்போதுமே போராடிக்கொண்டு இருக்கிறான் என்பதை  மனதில் கொண்டு நாமும் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். தன்னுடைய சூழ்ச்சி…

April

ஒரு சகாப்தத்தின் முடிவு

2024 ஏப்ரல் 28 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,10 முதல் 12 வரை) “பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்” (வசனம் 10). பூமியில் வாழ்ந்த மிகப் பெரிய தேவ மனிதனுடைய பூமிக்குரிய வாழ்க்கை முடிவடைந்தது. தேவனை விசுவாசித்த தன் முன்னோர்களைப் போலவே இவனும் நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தான். அவனுடைய விசுவாச வாழ்க்கைக்கான பிரதிபலன்களையும் வெகுமதிகளையும் பெற்றுக்கொள்ளும்படி இப்பொழுது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறான். “அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தான்” (1…

April

பிரதிபலன்கள்

2024 ஏப்ரல் 27 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,5 முதல் 9 வரை) “பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; … உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் (தாவீது) ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள்” (வசனம் 7). தாவீதுக்கு வயது மூப்பால் உடல் பெலவீனமாகக் காணப்பட்டாலும், அவன் நல்ல நினைவாற்றலுடன் இருந்தான். அவனது கடந்த காலக் காரியங்கள் அனைத்தும் மனதில் பசுமரத்தாணிபோல் நிறைந்திருந்தன. தனக்கு நன்மை செய்தவர்களையும் தீமை செய்தவர்களையும், உண்மையாய் உதவியவர்களையும், வாயினால் மட்டுமே அறிக்கையிட்டவர்களையும்…

April

நம்பிக்கையூட்டுதல்

2024 ஏப்ரல் 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 2,1 முதல் 4 வரை) “நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்; நீ திடன்கொண்டு புருஷனாயிரு” (வசனம் 2). நம்முடைய நண்பரும், உறவினரும் மரணத்தைச் சந்திக்கும் முன்னர், அவர்களது கடைசி வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்பதை அறிய நாம் யாவருமே ஆவலாயிருப்போம். யாக்கோபு தன் அந்திய காலத்தில் தன் பிள்ளைகள் அனைவரையும் அழைத்து தன் இறுதி உரைகளை வழங்கினான். மோசேயும் தான் மரிக்கும்முன் இஸ்ரவேல் மக்களிடம்…