ஜூன் 20
‘தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்‘
ரோமர் 8:33
நீதிமான்களாகிறது, குற்றமற்றவனென்று விடுதலையாகிறது, நீதிமான் என்று தீர்ப்புப்பெறுகிறது. இயேசுவிலுள்ள ஒவ்வொரு விசுவாசியும், முன்னே அவன் எவ்வளவு கெட்டவனாய் இருந்தபோதிலும், தான் எவ்வளவு அகத்தன், அபாத்திரன் என்று தனக்குள் உணர்ந்தபோதிலும், ஏகோவாவால் அவன் குற்றமற்றவனாக்கப்படுகிறான். கிறிஸ்துவின் பரிபூரண கிரியை அவனுக்குச் சாட்டப்படுகிறது; இலவசமான கிருபை அவனில் மகிமைப்படுகிறது; அவன் மரணத்தினின்று ஜீவனுக்குள்படுகிறான்; அவனுக்கு ஆக்கினைத்தீர்ப்பதில்லை. அவன்பேரில் குற்றஞ்சுமத்துவாரில்லை; தேவனுக்குப் பிரியமானவருக்குள் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறான். கிறிஸ்து அவனுக்காக பிழைத்தார், அவனுக்காக மரித்தார்; இப்போது அவன் பிழைத்திருக்கிறான். அவர் மூலமாய் அவரோடு மகிமையடைவான். குற்றங்களெல்லாம் இலவசமாய் மன்னிக்கப்பட்டு நித்தியமாய் மறக்கப்பட்டுப்போம்; நம்முடைய பாவங்களையெல்லாம் தேவன் தமது முதுகின் பிறகாலே எறிந்து நம்மை நீதிமான்களென்று சொல்லுகிறார். தேவன் நம்மை நீதிமான்களாக்கினாரென்று நம்பி அவரிடத்தில் சேருவோமாக; பூமிக்கெல்லாம் நியாயாதிபதியானவர் நம்மை நீதிமான்களென்று பகிரங்கமாய்த் தெரிவிப்பாரென்பதை எதிர்பார்த்து சந்தோஷப்படுவோமாக; நமதுமேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே நம்மை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாக்குகிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர், அவரே எழுந்துமிருக்கிறவர், அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர், நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. என் ஆத்துமாவே, இயேசுவைப் பார், அவர் பூரண கிரியையையும், பலனுள்ள அவர் வேண்டுதல்களையும் பார், அங்கே உன் ரட்சிப்பைக் காண்பாய் உன் சமாதானத்தைக் கண்டுபிடிப்பாய்.
ஆசாரியருட புண்ணியம்
கிடைத்தால் இளைப்பாறு;
தேவனுடைய காருண்யம்
நம்பி பயமற்றிரு;
இயேசு உனக்காய் மரித்தார்;
உனக்காகப் பேசுகிறார்.