ஜனுவரி 29
‘வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்‘
யோவான் 5:39
வேத வசனம் தேவன் கொடுத்த புஸ்தகம். அது மனிதருக்குக் கொடுக்கப்பட்ட தயவு தேவனுடைய தன்மை, ல்ஷணம், நோக்கம், சித்தம். செயல், ரட்சிப்பு ஆகிய இவைகளை அறிந்துகொள்ளும்படி அது ஒரு எத்தனமாகக் கொடுக்கப்பட்டது. நாம் அறிந்துகொள்ளவேண்டியதெல்லாம் அதிலுண்டு. அதை அடிக்கடி ஜெபத்தோடு கவனமாயும், ஒழுங்காயும் வாசிக்கவேண்டும். வேத வசனத்திலுள்ள ஒவ்வொரு பாகத்தையும் வாசித்துத் தியானித்துப் பிரார்த்திக்கவேண்டும். கிறிஸ்து இயேசுவிலுள்ள விசுவாசத்தினாலே அது நம்மை ரட்சிப்புக்கு ஞானிகளாக்குகிறது. பரிசுத்த ஆவியின் உதவியில்லாமல், நம்முடைய ஆத்துமாவுக்குப் பிரயோஜனமுண்டாகத் தக்கதாக நாம் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கமாட்டோம். வேத எழுத்துக்கள் மூலமாய்த்தான் நாம் தேவ சித்தத்தை அறிந்துகொள்ளவேண்டும். வாசிப்பும், ஜெபமும், தியானமும் ஒன்றாய்ச் சேரவேண்டும். இப்படி வேதவாக்கியத்தைப் பரீட்சித்தவன்தான் அதினாலுண்டான பிரயோஜனத்தைச் சொல்லக்கூடியவன். வேத புஸ்தகம் நீ நித்தம் வாசிக்கிற புஸ்தகமாயிருக்கட்டும். அது உன் குணத்தைச் சுத்தமாக்கும். உன் வழியில் உன்னை நடத்தும், உமக்கு மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் தரும். வேத வசனத்திற்குப் பதிலாக மனிதருடைய கிரியையை நாடாதே. வேத வசனத்தை ஆராய்ந்து பாருங்கள்; அதில் விசுவாசம் வையுங்கள். உம்முடைய நியாயப்பிரமாணங்களிலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் புத்தியின் கண்களைத் திறந்தருளும், உமது கிருபையின் ஐசுவரியத்தை எனக்குக் காண்பியும்.
உமது யோசனைப்படி
நடத்துமேன், என் அடி
உமது வலது கரம்
நடத்துவதென் வரம்


