ஜனுவரி 22
‘நான் உனக்குக் கேடகம்‘
ஆதியாகமம் 15:1
விசுவாசிக்கிறவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமோடு பாக்கியவான்களாயிருக்கிறார்கள். தேவன் ஆபிரகாமுக்குச் செய்த வாக்குத்தத்தங்களை நமக்கு நிறைவேற்றுவார். நம்மைச் சூழ சத்துருக்கள் இருக்கிறார்கள். எப்பக்கத்திலும் அக்கினி அம்புகளைப் பார்க்கிறோம். இயேசுவில் ஏகோவா நம்முடைய கேடகமாக நடுவே வருகிறார். அவரோடு நமக்கிருக்கும் சம்பந்தத்தால்தான் நாம் பத்திரமாய்ப் பாதுகாக்கப்படவேண்டும். அவர் நம்மைக் காப்பாற்றி ஆதரிக்காவிட்டால் நாம் சீக்கிரம் ஜெயிக்கப்பட்டுப்போவோம். நம்முடைய தேவன் நம்மைக் காக்கிறவர், உன்னத கர்த்தர் நம்மை ஆதரிக்கிறவர் என்று நாம் நினைக்கும்போது எவ்வளவு சுகபத்திரமாயிருக்கிறோம், எவ்வளவு பாக்கியராயிருக்கிறோம். சத்துருக்கள் நம்மை பயப்படுத்தி, மோசங்கள் நம்மைத் திடுக்கிடப்பண்ணினாலும், கர்த்தருடைய நாமம் பலத்த அரணென்று நினைத்துக்கொள். அதற்குள் ஓடி சுகமாயிருப்பாய். விசுவாசந்தான் கை. ஏகோவா உன் கேடகம். சாத்தானோடும், பாவத்தோடும், உலகத்தோடும் போர் செய்கிறோம். இரட்சிப்புக்கென்று நாம் விசுவாசிக்கும்போது தேவவல்லமையால் கோட்டைக்குள் இருப்பவர்கள்போலக் காப்பாற்றப்படுகிறோம். என் சகோதரனே! இந்த நாளெல்லாம் இயேசுவை உன் கேடகமாகப் பிடித்துக் கொள். அவரிடத்திலிருந்துதான் உனக்கு வேண்டிய ஷேமமும் ஆறுதலுங் கிடைக்குமென்று அவரை நோக்கு. உன்னைக் காப்பாற்ற உன்னோடிருக்கிறார். உன் கெஞ்சுதலுக்குச் செவி கொடுப்பார்; உன் வெளிப்புறப்படுதலையும், உன் உட்பிரவேசிக்குதலையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காப்பார். இரட்சணியமென்னும் கேடகத்தை அவர் உனக்குத் தருவார். அவருடைய சாந்தம் உன்னைப் பெரியவனாக்கும்.
குற்றம் செய்த பாவிகட்கு
நீதிவர லாச்சுது,
சத்துரு மோசம் சோதனைக்கு
கேடகமுமாச்சுது.


