மே 6
‘இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்’
1 தெசலோனிக்கேயர் 5:17
ஜெபம் பண்ணும்போது நாம் தேவனைத் தகப்பனைப்போல எண்ணவேண்டும்; தேவையானதைக் கேட்கவேண்டும். அவர் தம்முடைய வசனத்தின்படி நியாயமானதைத் தருகிறதை எதிர்பார்க்கவேண்டும். நமக்கு எப்போதும் குறைவு இருக்கிறது; ஆதலால் நாம் எப்போதும் ஜெபம்பண்ணிக்கொண்டே இருக்கவேண்டியது. ஆம். அவர் செவி எப்போதும் திறந்திருக்கிறது. அவர் நமக்கு எப்போதும் செவிகொடுக்க ஆயத்தமாயிருக்கிறார். எக்காரியத்துக்கும் எப்போதும் ஜெபம்பண்ணும்படி அழைக்கிறார். எழுப்பிவிடுகிறார். கற்பிக்கிறார்; கண்ணுக்கு முன்வரும் எந்தக் காரியமும் நடக்கும். எந்தச் சம்பவமும், நாம் செய்கிற எந்த வேலையும் சரியானபடி பார்த்தால், நம்மை ஜெபிக்க ஏவுகிறது. விசுவாசிக்கு ஜெபிக்கிற வழக்கம் வேண்டும். தனக்கு வேண்டிய சகலத்துக்கும், ஒழிந்திருக்கிற எந்த நிமிஷத்திலும்; தான் காண்கிற எல்லாவற்றின் மூலமாயும், அவன் தேவனண்டைக்குக் கண்ணை ஏறெடுக்கவேண்டும். கிறிஸ்தவனுடைய ஜெபங்கள் தேவனுக்கு எவ்வளவு பிரீதி. ‘நான் உன் சத்தத்தைக் கேட்கவேண்டும், உன் முகத்தைப் பார்க்கட்டும், உன் சத்தம் இனிமையானது; உன் முகம் அழகுள்ளது’ என்று சுவாசமிடுகிறதைப்போல் கிறிஸ்தவன் வருத்தமில்லாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும். ஜெபம் ஆத்துமாவின் சுவாசம். நேசனே! ஜெபம் உனக்குக் கடமையாய்த் தோன்றுமானால், பாரமாக எண்ணி சில சமயங்களில் மாத்திரம் ஜெபம் பண்ணுவாயானால், உன் ஆத்துமம் எவ்வளவோ கெட்டுப்போய் இருக்கின்றது என்பது தெளிவாயிருக்கிறது.
மேகம் கர்ச்சிக்கும்போது
தாயிடம் பிள்ளை ஓடும்.
லோகம் பகைக்கும்போது
என் ஆவியும்மைத் தேடும்,
ஜெபிக்க க்ருபைதாரும்
என்னில் வசிக்க வாரும்.