மே 4
‘உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன்’
எரேமியா 2:22
பாவம் வியாதியைக் கொண்டுவருகிறது. விசுவாசி தேவனோடு நடந்து, உலகத்தை வெறுத்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு எதிர்பார்த்திருந்தால்தான் சுகமே இருப்பான். நாம் இயேசுகிறிஸ்துவின் பாதத்தண்டையில் சுகபத்திரமாய் இருப்போம், சவுக்கியமாய் இருப்போம். அவரைவிட்டு அலைவோமானால், ஆத்துமநோய் நம்மைபிடிக்கும். பாவி தேவ கற்பனைகளின் வழியாய் ஓட பலமற்றவனாய்ப் போகிறான். தேவ வாக்குத்தத்தங்களைத் தன்னுடைய தாக்கிக்கொள்ளாமல் கலங்குகிறான். தேவனைப் பிதாவென்று அழைக்கக்கூடாத குற்றவாளியாகிறான். நம்பிக்கையில் களிகூரா நிர்ப்பந்தனாகிறான். அவன் தாழ்மையாய் ஜெபம்பண்ணமாட்டான். வேத புஸ்தகத்தில் அவனுக்கு இனிமையில்லை. மனச்சாட்சியில் அவனுக்குச் சமாதானமும் இல்லை. கர்த்தருடைய வழிகளில் அவனுக்குப் பிரியமில்லை. சீர்கெட்ட பிள்ளைகளே! திரும்புங்கள், உங்கள் சீர்கேடுகளை குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது பெரிய வைத்தியன் அனுப்பும் செய்தி; நம்முடைய பிதாவின் சிம்மாசனத்தில் இருந்து அவர் அழைக்கும் சத்தம்; நம்முடைய ரட்சகரின் அன்பு கொடுக்கும் வாக்கு. நாம் அழுகையோடும் விண்ணப்பத்தோடும் அவரிடம் வந்து, தாவீதைப்போல ‘என் ஆத்துமாவைக் குணமாக்கும், நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்’ என்று ஜெபம்பண்ணுவோமாக. சபை தீர்மானஞ் செய்ததுபோல ‘இதோ, உம்மண்டையில் வருகிறோம். நீர் எங்கள் தேவனாகிய கர்த்தர்’ என்று தீர்மானஞ் செய்ததுபோல ‘இதோ, உம்மண்டையில் வருகிறோம். நீர் எங்கள் தேவனாகிய கர்த்தர்’ என்று தீர்மானஞ்செய்வோமாக. அவர் நம்மைக் கிருபையாய் ஏற்றுக்கொள்வார், இலவசமாய் உன்னை நேசிப்பார்.
மன்னிப்புணரச்செய்யும்,
நான் கெட்டேன் சீர்ப்படுத்தும்.
க்ருபையாம் மாரி பெய்யும்,
என்னை ஸ்திரப்படுத்தும்,
தேவசமுகம் காட்டும்,
என் பாவம் தொலைத்திடும்.