Monday, March 2, 2026
Tamil Bible Blog
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
  • வேதாகம ஆராய்ச்சி
    • வேத வகுப்புகள்
    • தினதியானம்
    • வேததியானங்கள்
      • ஆதியாகமம்
      • மத்தேயு
  • படித்தவைகள்…
    • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
    • வேதாகம சித்திர கதைகள்
    • வேதாகம கதைகள்
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்
    • இலகு மொழிபெயர்ப்பு
    • ஓராண்டு வேதாகமம்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • நூல் அறிமுகம்
No Result
View All Result
Tamil Bible Blog
No Result
View All Result
Home ஆதியாகமம்

ஆதியாகமம் 47

Webmaster by Webmaster
April 30, 2025
in ஆதியாகமம், இலகு மொழிபெயர்ப்பு
0
நாள் 1 – ஆதியாகமம் 1-3
74
SHARES
1.2k
VIEWS

இஸ்ரவேல் கோசேனில் குடியேறுதல்

47 யோசேப்பு பார்வோனிடம் சென்று, “எனது தந்தையும் சகோதரர்களும் அவர்களின் குடும்பமும் வந்துள்ளது. அவர்கள் தங்கள் மிருகங்களையும், பொருட்களையும் கொண்டுவந்துள்ளனர். அவர்கள் இப்போது கோசேன் பகுதியில் உள்ளனர்” என்றான். 2 யோசேப்பு தம் சகோதரர்களில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து அழைத்துச் சென்று பார்வோன் முன் நிறுத்தினான்.

You might also like

லேவியராகமம் 23

லேவியராகமம் 22

லேவியராகமம் 21

3 பார்வோன் அவர்களிடம், “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.

அவர்கள், “ஐயா, நாங்கள் மேய்ப்பர்கள். எங்கள் முற்பிதாக்களும் மேய்ப்பர்கள்” என்றனர். 4 மேலும், “கானான் நாட்டில் பஞ்சம் அதிகம். எங்கள் மிருகங்களுக்கு அங்கே புல் மிகுந்த வயல் எதுவுமே இல்லை. எனவே, இங்கே வாழ்வதற்காக வந்துள்ளோம். கோசேனில் வாழ அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.

5 பார்வோன் யோசேப்பிடம், “உனது தந்தையும் சகோதரர்களும் உன்னிடம் வந்திருக்கிறார்கள். 6 எனவே, நீ எந்த இடத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அவர்களுக்கு நல்ல நிலத்தைக் கொடு. அவர்கள் வேண்டுமானால் கோசேனிலேயே வாழட்டும். அவர்கள் திறமையுள்ள மேய்ப்பர்கள் என்றால் எனது ஆடுமாடுகளையும் பார்த்துக்கொள்ளலாம்” என்றான்.

7 யோசேப்பு தன் தந்தையை பார்வோனைப் பார்ப்பதற்காக அழைத்தான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.

8 பார்வோன் அவனிடம், “உங்களுக்கு எத்தனை வயதாகிறது?” என்று கேட்டான்.

9 “ஏராளமான துன்பங்களோடு மிகக் குறுகிய காலமே வாழ்ந்திருக்கிறேன். என் வயது 130 ஆண்டுகளே. எனது தந்தையும் அவருடைய முற்பிதாக்களும் என்னைவிட அதிகக் காலம் வாழ்திருக்கிறார்கள்” என்றான்.

10 யாக்கோபு பார்வோனை வாழ்த்தி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

11 பார்வோன் சொன்னதுபோலவே யோசேப்பு தந்தைக்கும் சகோதரர்களுக்கும் நல்ல நிலத்தை கோசேனில் கொடுத்தான். இது எகிப்திலேயே சிறந்த இடம். இது ராமசேஸ் நகரத்துக்கு அருகில் உள்ளது. 12 யோசேப்பு தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் குடும்பத்துக்கும் வேண்டிய உணவுப் பொருட்களையும் கொடுத்தான்.

யோசேப்பு பார்வோனுக்காக நிலம் வாங்குதல்

13 பஞ்சம் மிகவும் மோசமாகியது. பூமியில் எங்கும் உணவு இல்லை. எகிப்தும் கானானும் இக்காலத்தில் மிகவும் மோசமாகியது. 14 ஜனங்கள் நிறைய தானியங்களை விலைக்கு வாங்கினார்கள். யோசேப்பு அச்செல்வத்தைச் சேர்த்து வைத்து பார்வோனின் வீட்டிற்குக் கொண்டு வந்தான். 15 கொஞ்ச காலத்தில் எகிப்திலும் கானானிலும் உள்ள ஜனங்களிடம் தானியம் வாங்கப் பணம் இல்லை. தம்மிடம் இருந்த பணத்தை ஏற்கெனவே தானியம் வாங்குவதில் செலவழித்திருந்தார்கள். எனவே அவர்கள் யோசேப்பிடம் சென்று, “தயவு செய்து தானியம் கொடுங்கள். எங்கள் பணம் தீர்ந்துவிட்டது. நாங்கள் உணவு உண்ணாவிட்டால் உங்கள் முன்னாலேயே மரித்துவிடுவோம்” என்று வேண்டினார்கள்.

16 ஆனால் யோசேப்போ, “உங்கள் ஆடு மாடுகளைக் கொடுங்கள் உணவு தருகிறேன்” என்றான். 17 எனவே ஜனங்கள் தங்கள் ஆடு மாடுகளையும் குதிரைகளையும் மற்ற மிருகங்களையும் உணவுக்காக விற்றனர். யோசேப்பு அவற்றை வாங்கிக்கொண்டு உணவைக் கொடுத்தான்.

18 ஆனால் அடுத்த ஆண்டு அவர்களிடம் விற்க மிருகங்களும் இல்லை. எனவே, யோசேப்பிடம் ஜனங்கள் போய், “எங்களிடம் உணவு வாங்கப் பணம் இல்லை. எங்களது மிருகங்களோ உங்களிடம் உள்ளது. எங்களிடம் எதுவும் இல்லை. எங்கள் சரீரமும், நிலங்களும் மட்டுமே உள்ளது. 19 நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் மரித்துவிடுவோம். ஆனால் நீங்கள் உணவு கொடுத்தால் பார்வோன் மன்னருக்கு எங்கள் நிலங்களைக் கொடுப்போம். நாங்கள் அவரது அடிமைகளாக இருப்போம். விதை கொடுங்கள் விதைக்கிறோம். பிறகு நாங்கள் மரிக்காமல் உயிர் வாழ்வோம். நிலத்தில் மீண்டும் உணவு விளையும்” என்றனர்.

20 எனவே, யோசேப்பு எகிப்தில் உள்ள எல்லா நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிவிட்டான். அனைவரும் தங்கள் நிலங்களை யோசேப்பிடம் விற்றுவிட்டார்கள், அவர்கள் பசியாய் இருந்ததால் இவ்வாறு செய்தார்கள். 21 எகிப்திலே, எல்லோரும் பார்வோன் மன்னனின் அடிமைகள் ஆனார்கள். 22 ஆசாரியர்களுக்கு உரிய நிலத்தை மட்டுமே யோசேப்பு வாங்கவில்லை. அவர்களின் உணவுக்கு ஆசாரியர்கள் தங்கள் நிலத்தை விற்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. ஏனெனில் மன்னன் தேவையானவற்றைச் சம்பளமாகக் கொடுத்து வந்தான். அதையே உணவு வாங்க வைத்துக்கொண்டனர்.

23 யோசேப்பு ஜனங்களிடம், “இப்போது நான் உங்கள் நிலத்தையும் உங்களையும் பார்வோனுக்காக வாங்கிவிட்டேன். எனவே விதை கொடுக்கிறேன். நீங்கள் அந்நிலங்களில் பயிர் செய்யுங்கள். 24 அறுவடைக் காலத்தில், நீங்கள் ஐந்தில் ஒரு பாகம் எங்களுக்குக் கொடுக்க வேண்டும். ஐந்தில் நான்கு பாகம் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். அதில் விதை வைத்திருந்து அடுத்த ஆண்டுக்குப் பயன்படுத்தலாம். இப்போது உங்கள் குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் உணவு கொடுக்கலாம்” என்றான்.

25 ஜனங்களோ, “எங்கள் உயிரைக் காப்பாற்றினீர்கள். நாங்கள் பார்வோனுக்கு அடிமையாக இருப்பதில் மகிழ்கிறோம்” என்றனர்.

26 எனவே, யோசேப்பு அப்போது ஒரு சட்டத்தை இயற்றினான். அது இன்றும் உள்ளது. அதன்படி நில வருவாயில் ஐந்தில் ஒரு பாகமானது பார்வோனுக்குரியது. பார்வோனுக்கு எல்லா நிலமும் சொந்தமாக இருக்கும். ஆசாரியர்களின் நிலம் மட்டுமே, பார்வோனுக்குச் சொந்தமாகவில்லை.

“தன் மரணம் பற்றி யாக்கோபின் அறிவிப்பு”

27 இஸ்ரவேல் (யாக்கோபு) எகிப்தில் கோசேன் பகுதியில் வாழ்ந்தான். அவனது குடும்பம் வளர்ந்து மிகப் பெரியதாகி அப்பகுதியில் நன்றாக வாழ்ந்தனர்.

28 யாக்கோபு எகிப்தில் 17 ஆண்டுகள் வாழ்ந்தான். எனவே அவனுக்கு 147 வயது ஆனது. 29 தான் விரைவில் மரித்துப் போவேன் என்று இஸ்ரவேலுக்குத் (யாக்கோபு) தெரிந்தது. அவன் யோசேப்பை அழைத்து அவனிடம்: “நீ என்னை நேசித்தால், உன் கையை என் தொடையின் கீழ் வைத்து ஒரு வாக்குறுதியைச் செய். நான் சொல்வதை நீ செய்யவேண்டும். எனக்கு உண்மையாக இருக்கவேண்டும். நான் மரித்தால் என்னை எகிப்தில் அடக்கம் செய்யவேண்டாம். 30 எனது முற்பிதாக்களை அடக்கம் செய்த இடத்திலேயே என்னையும் அடக்கம் செய்துவிடு. இங்கிருந்து கொண்டுபோய் நமது குடும்பக் கல்லறையில் என்னை அடக்கம் செய்” என்றான்.

யோசேப்பு, “நீர் சொன்னபடியே நான் செய்வேன் என்று வாக்குறுதி செய்கிறேன்” என்றான்.

31 பிறகு யாக்கோபு, “எனக்கு வாக்கு கொடு” என்று கேட்டான். யோசேப்பும் அவ்வாறே வாக்குறுதி அளித்தான். பின் இஸ்ரவேல் (யாக்கோபு) படுக்கையில் தன் தலையைச் சாய்த்தான்.

Webmaster

Webmaster

Recommended For You

லேவியராகமம் 23

நாள் 28 – லேவியராகமம் 1-4

சிறப்பான பண்டிகைகள் 23 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கீழ்க்கண்ட பண்டிகைகள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுத்த கூட்டங்கள் என்று அறிவி: ஓய்வு நாள் 3 “ஆறு நாட்கள் வேலை செய்யுங்கள். ஏழாவது நாள் ஓய்விற்குரிய சிறப்பு நாள். பரிசுத்தமான சபை...

Read moreDetails

லேவியராகமம் 22

நாள் 28 – லேவியராகமம் 1-4

22 தேவனாகிய கர்த்தர் மோசேயிடம், 2 “ஆரோனிடமும் அவனது குமாரர்களிடமும் கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் எனக்குக் கொடுக்கும் பொருட்கள் பரிசுத்தமானவையாக இருக்கும். அவை என்னுடையவை. எனவே ஆசாரியர்களாகிய நீங்கள் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் பரிசுத்த பொருட்களை உங்கள் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தினால் நீங்கள்...

Read moreDetails

லேவியராகமம் 21

நாள் 28 – லேவியராகமம் 1-4

ஆசாரியர்களுக்கான விதிகள் 21 கர்த்தர் மோசேயிடம், “ஆரோனின் குமாரர்களான ஆசாரியர்களிடம் பின் வருபவைகளைக் கூறு: ஒரு ஆசாரியன் மரித்த ஒருவனின் உடலைத்தொட்டு தீட்டுள்ளவனாகக் கூடாது. 2 ஆனால் மரித்தவன் அவனது நெருங்கிய உறவினனாக இருந்தால் அவன் அந்தப் பிணத்தைத் தொடலாம். மரித்துபோனவர்கள் அவரது...

Read moreDetails

ஆதியாகமம் 4,25-26 தொகுப்பு

ஆதியாகமம் 4,25-26 தொகுப்பு

வசனங்கள் 25 மற்றும் 26-ல் ஆதாம் முதன்முறையாகக் குறிப்பிடப்படுகிறார். ஆபேலின் கொலை மற்றும் காயீனின் மனந்திரும்பாத சுபாவத்தினால் அவரும் ஏவாளும் அடைந்த மிகுந்த துயரம் இதில் விவரிக்கப்பட்டுள்ளது. இத்துன்பங்களுக்கு மத்தியிலும், தங்கள் குடும்பம் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதைக் கண்டு அவர்கள்...

Read moreDetails

ஆதியாகமம் 4,23-24 தொகுப்பு

ஆதியாகமம் 4,23-24 தொகுப்பு

லாமேக்கு ஒரு கொடூரமான மனநிலையைக் கொண்டவனாகவும், சிறிதும் இரக்கமின்றித் தாக்கும் ஒரு பொல்லாத மனிதனாகவும் விவரிக்கப்படுகிறான். அவனுடைய மனைவிகள் அவனைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆனால் அவனோ, தன்னைத் தாக்குபவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் அவர்களை வீழ்த்திவிடுவதாகத் தன்னம்பிக்கையுடன் கூறுகிறான்.

Read moreDetails
Next Post
நாள் 1 – ஆதியாகமம் 1-3

ஆதியாகமம் 48

Please login to join discussion

Browse by Category

  • ஆதியாகமம்
  • இன்றைய வசனம்
  • இயேசுவுடன் நூறு நாட்கள்
  • இலகு மொழிபெயர்ப்பு
  • ஓராண்டு வேதாகமம்
  • கவிதைகள்
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்துவின் வாழ்க்கை
  • சங்கீதம்
  • சாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்
  • தினதியானம்
  • துண்டுப் பிரதிகள்
  • நீதிமொழிகள்
  • நூல் அறிமுகம்
  • படித்தவைகள்…
  • பரிசுத்த வேதாகமம்
  • பாடல்கள்
  • புலம்பல்
  • மத்தேயு
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • வீடியோ
  • வேத வகுப்புகள்
  • வேத வசனங்கள்
  • வேததியானங்கள்
  • வேதாகம ஆராய்ச்சி
  • வேதாகம சித்திர கதைகள்
  • வேதாகம தீர்க்கதரிசனங்கள்
Tamil Bible Blog

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Links

  • தமிழ் வேதாகமம்
  • விசுவாச தின தியானம்
  • இன்றைய இறைத்தூது
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2022
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2023
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2024
  • நாளுக்கொரு நல்ல பங்கு 2025

Follow Us

No Result
View All Result
  • Home
  • ஓராண்டு வேதாகமம்
  • வேதாகம ஆராய்ச்சி
  • படித்தவைகள்…
  • துண்டுப் பிரதிகள்
  • பரிசுத்த வேதாகமம்

Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?