January

ஐனவரி 19

பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம் பண்ணினார்கள். ஆவியானவரோ அவாகளைப் போகவெட்டாதிருந்தார் (அப்.16:7).

தேவன் தமது பிள்ளைகளைத் திறவுண்ட கதவுகள்மூலம்வழிநடத்துவதுபோன்றே அடைபட்ட வாசல்களைக்கொண்டும் வழிநடத்துகிறார். சில வேளைகளில்நாம் இது சிறந்த வழியென திட்டமிட்டுச் செல்வோம். ஆனால் அங்கு வழி நமக்கு முன்பாகஅடைக்கப்பட்டு இருக்கும். இப்படித்தான் நாம் தேவனுடைய வழி நடத்துதலை அறியமுடியும். பாதைஅடைபட்டிருந்தால் நாம் வேறு பாதையாகத்தான் செல்லவேண்டும் அல்லது நம் சுயநம்பிக்கையாலும்,உறுதியினாலும் தடைகளைத் தாவிக் குதித்து செல்லவேண்டும் என்பதுதான் இதன் பொருளா?

நாம் முன்னேறிச் செல்வதைத் தடுப்பவன் யார்?ஆகையால் நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம். பவுலாகிய நானேவர மனதாயிருந்தேன். சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான் (1.தெச.2:18). எனப் பவுல் இப்படிப்பட்டதடையைத்தான் குறிப்பிகிறோரோ? அல்லது பரிசுத்த ஆவியானவர் அவரை மெதுவாக ஆனால்அதிகமாக வலியுறுத்தித் தடை செய்கிறாரா?

இப்படிப்பட்ட இரண்டு வகையான தடைகளையும் நாம்பகுத்து உரணவேண்டியது அவசியம். எதிராளிக்கு எதிர்த்து நின்று அவனது தடைகளைத் தகர்த்தெறியவேண்டும். அவன் உக்கிரமாக எதிர்த்து வந்தாலும் நாம் முன்னேறிச் செல்லவேண்டும். இதையே,பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் (யாக்.4:7)என்று யாக்கோபு கூறியுள்ளார்.

நாம் போகவேண்டிய வழி இன்னதென அவர் அறிவார்.ஆகவே நாம் பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படியவேண்டும். நாம் தேவனுடைய சித்தத்தைஜெபத்தோடும், பொறுமையோடு, முழு இருதயத்தோடும், ஆவியானவருக்கு இடமளித்து தேடவேண்டும்.அவர் அடைத்துப்போட்ட கதவுகளை உடைத்துக்கொண்டு நுழைய விரும்பாமல் அவருக்குக்கீழ்ப்படியவேண்டும். அப்பொழுதுதான் அவர் நமக்கென வேறோரு கதவைத் திறந்து வைத்து, இதைஅடைத்துப் போட்டுவிட்டார் என அறியும் அறிவைப் பெறுவோம்.

தேவன் தடைகளின்மூலமாயும் தம் சித்தத்தைவெளிப்படுத்துகிறார். நமக்கு நல்லதென நாம் கருதுவன பலவுண்டு. ஆனால் மிக நல்லது எதுவெனதேவன் நன்கறிவார்.