January

ஐனவரி 8

….. தானியேலைக்குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள். …. அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை (தானி.6:4).

தீமோத்தேயு தைரியமற்ற அழுமூஞ்சியாக இருந்தான்.ஆனால் தானியேலோ பெரிய பொறுப்புகளையும், உயர்ந்த பதவிகளையும் பெற்றிருந்தான். அவன் இவ்விதமானமிகச் சிறந்த பதவியையும், மேன்மையையும் தேடவில்லை. ஆனால் அந்த இடத்திற்கு வலியதள்ளப்பட்டான். பிறர் பொறாமைப்படும்படி உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு அரசாங்கத்தில்செல்வாக்கு பெருகும்போது, உயர்ந்த நிலையில் இருப்பது கடினம். அதைவிட அறியாத இடத்தில்உண்மையுள்ளவனாக வாழ்வது நம் யாவருக்கும் எளிது.

ஆரம்பம் முதல் கடைசி வரையில் தானியேல் தன்வாழ்நாள் முழுவதும் உண்மையாக இருந்தான். தன் பெற்றோருக்கு உண்மையுள்ளவனாயிருந்தான்.அவர்கள் ஒருவேளை எருசலேமின் முற்றுகையின்போது இறந்துபோயிருக்கலாம். அவர்களுக்கு உணவுகொடுத்து, அவர்களிட்ட கட்டளைகளின்படி நடந்துவந்தான். தன்னை வேலையில்அமர்த்திக்கொண்ட இளவரசனுக்கு உண்மையாக நடந்து, அழைக்கப்பட்ட ஊழியத்தைநிறைவேற்றினான். அதுவும், நாடுகடத்தப்பட்ட நிலையிலும்கூட உண்மையாக இருந்தான். அந்நியநாட்டில் அரச சபையில் தன் கடமையில் தவறாமல் உண்மையுடன் செய்து வந்தான். தனது இக்கட்டிலும்கூட தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவனுக்கு முதலிடம் கொடுத்து, உண்மையும்உத்தமமுமாய் வாழ்ந்து வந்தான்.

தானியேலின் வாழ்வின் பிற்பகுதியில் அவனைச்சிங்கங்களுக்கு இரையாகப் போடப்படும் அபாயம் நெருங்கிற்று. இவ்வகையான அனுபவம் அடிக்கடிநமக்கு வரக்கூடியதல்ல. ஆபிரகாம் தன் நூறு வயதைக் கடந்தபின்பு ஈசாக்கை பலியிடவேண்டியிருந்தது. தாவீதுக்கு விரோதமாக அவனது மகன் அப்சலோம் கலகம் செய்தான்.செசரியாவின் சிறைசாலையில் பவுல் தள்ளப்பட்டான். தானியேலோ தன் இக்கட்டிலும்தேவனிடம் உண்மையுள்ளவனாயிருந்தான். தம்மை நம்புகிறவர்களைத் தேவன் கைவிடுவதில்லை என்றுதரியு மன்னன் கண்டு கொண்டான். சோதனைக்குப் பின்பே வெற்றி கிட்டும். பொறாமை தன்னைஉடையவர்களையே அழித்துவிடும். நீதிமானுக்கென குழி வெட்டுவோர் தாங்கள் வெட்டின அதேகுழியில் விழுவார்கள் (சங்.57:6).