February

பெப்ரவரி 18

பெப்ரவரி 18

…..தனக்குவெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறான்… (ஏசா.50:10).

இருதயத்தன் ஆழத்தில் இருள் சூழும்போது, தேவன்தன்னை முற்றிலும் மறந்துவிட்டாரோ என்று அவருடைய பிள்ளைகள் சிலர் கருதுவதுண்டு. உடலிலோவியாதி. நண்பர்கள் யாவராலும் கைவிடப்பட்ட நிலை. இருக்கிற சில நண்பர்களோ வேதனையைஅதிகரிக்கச் செய்பவர்கள். பகலும் இருண்டு இருளாகிவிட்டது. இரவு நீண்டு கொண்டேயிருக்கிறது.எப்பொழுது விடியும் என்று தெரியவில்லை. நாளைய தினத்தைக் குறித்து நம்பிக்கை ஒளியில்லை.இந்தக் கஷ்டத்தில் வாழ்வதைவிட மடிவதேமேல் எனத் தோன்றுகிறது. இதே நிலையில் இருந்தயோபு, தன் வழியைக் காணக்கூடாதபடிக்கு, தேவனால் வளைந்து கொள்ளப்பட்டவனுக்குவெளிச்சத்தினால் பலன் என்ன? (யோபு 3:23) எனக் கேட்டு, ஆ என் மன்றாட்டு எனக்குஅருளப்பட்டு… தேவன்… தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப் போட்டால்நலமாயிருக்கும் (யோபு 6:8-9) எனக் கதறுகிறான்.

வாழ்வில் இருள் சூழும் நேரத்தில், தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ, எனக் கேட்கத் தோன்றும். அவருக்கு உன்னைக் குறித்துஅக்கறையில்லாமலில்லை. இந்த இருளுக்குள் நீ அவருடைய சித்தத்தின்படியே வந்துள்ளாய். உன்கீழ்ப்படியாமையினாலேதான் தேவன் உன்னை விட்டுவிட்டார். சாத்தான் இவ்விதமான பலநிபந்தனைகளைக் கூறுவான். ஆனால் ஏசாயா 50:10ல் உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து,அவருடைய தாசனின் சொல்லகை;கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலேநடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்எனக் கூறியிருக்கிறது.

சோதனைகள் வரும்பொழுது நம்பிக்கையை இழந்துவிடுகிறோம். இருள் சூழும்போது தப்பிக்கொள்வதற்காக நமது சொந்த வழிகளைத் தேடுகிறோம்.இது தவறு. தேவனில் சார்ந்திரு. தேவன் உன்னிடத்தில் வெளிச்சத்தில் கூறியவற்றை நீ இருளிலும்நினைத்துக்கொள். இருள் சூழ்ந்த வேளையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான்.ஒருபோதும் தேவனைச் சந்தேகிக்காதே!