வழுவிப்போகாத இருதயம்
2024 ஜூலை 1 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,1 முதல் 3 வரை) “அவனுக்கு (சாலொமோனுக்குப்) பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்” (வசனம் 3). “விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” (நீதிமொழிகள் 16,18) என்று சாலொமோன் தான் சொன்ன பிரகாரமே கர்த்தர் அருளிய ஆசீர்வாதங்களால் மனமேட்டிமை அடைந்தான். இங்கே சாலொமோன் கர்த்தருடைய கற்பனைகளுக்கு மாறாக இரண்டு தவறுகளைச் செய்தான். ஒன்று, கர்த்தரால் தடைசெய்யப்பட்ட அந்நிய பெண்களை…