இரண்டில் ஒன்று
2024 செப்டம்பர் 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,21) “அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான்” (வசனம் 21). இப்பொழுது பிரச்சினை எலியாவுக்கும் ஆகாபுக்குமானதல்ல; பரிசுத்த தேவனுக்கும் பாகாலுக்குமானது. இஸ்ரவேல் நாட்டின் மக்கள் இரண்டு நினைவுகளால் ஆட்கொள்ளப்பட்டு, சரியான தீர்மானம் எடுக்காதபடிக்குக் குந்திக்குந்தி நடந்தார்கள். எனவே இப்பொழுது இரண்டில் ஒன்றைத் தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது.…