விசுவாசப் பார்வை
2024 செப்டம்பர் 30 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,31) “உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப் பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து” (வசனம் 30). எலியா பன்னிரண்டு கற்களை எடுத்தது சூழ நின்றிருந்தோரின் புருவத்தை உயர்த்தியிருக்கும். ஏனெனில் இப்பொழுது கர்மேல் மலையில் கூடியிருந்தது பத்துக் கோத்திரங்கள் அடங்கிய இஸ்ரவேல் தேசத்தார் மட்டுமே. எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த மக்கள் யோசுவாவின் தலைமையில் யோர்தானைக் கடந்தபின்,…