October

மனதின் அரையைக்  கட்டுதல்

2024 அக்டோபர் 11 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,45 முதல் 46 வரை) “அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்” (வசனம் 45). எலியா தன் உதவியாளனிடம், “ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல்” என்றான் (வசனம் 44). எலியா கையளவான மேகத்தைக் கண்டு துரிதமாகச் செயல்பட்டான். இந்தச் சிறிய மேகத்துக்குப் பின்னால் பெரிய தேவன் இருக்கிறார் என்பதை…

October

வல்லமையான ஜெபம்

2024 அக்டோபர் 10 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,41 முதல் 44 வரை) “ஆகாப் போஜனபானம் பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து…” (வசனம் 42). இஸ்ரவேல் நாட்டில் பாகால் வழிபாடு அரசனின் முன்னிலையிலும் மக்களின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தோற்கடிக்கப்பட்டது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக மழை பெய்யாததற்கான காரணம் களையப்பட்டு, தேவனுடைய எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது. இனி அடுத்து நடைபெற வேண்டியது, தேவனால்…

October

தீமையை அகற்றுதல்

2024 அக்டோபர் 9 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,40) “அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்” (வசனம் 40). தேவன் தனது ஜெபத்துக்குப் பதில் அளித்துவிட்டார் என்று கருதி, எலியா அத்துடன் காரியங்களை நிறுத்திவிடவில்லை. அவன் தொடர்ந்து பாகால் தீர்க்கதரிசிகளோடு செயல்பட்டான். அவன் பாகால் தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் உட்பட 850…

October

பட்சிக்கிற அக்கினி

2024 அக்டோபர் 8 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,38 முதல் 39 வரை) “அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும்… நக்கிப்போட்டது” (வசனம் 38). எலியாவின் தேவன் நம் தேவன் வல்லமையின் தேவன் நம் தேவன் தாசர்களின் ஜெபம் கேட்பார் வல்லபெரும் காரியம் செய்திடுவார். ஜெபத்துக்குப் பதிலளிக்கிற தேவனின் மேன்மை குறித்து ஒரு பக்தன் எழுதிய அருமையான பாடல் இது. ஆம், எலியாவின் தேவனே நம் தேவனாகவும் இருக்கிறார். இருப்பினும் பழைய…

October

சான்றுகள்

2024 அக்டோபர் 7 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,38 முதல் 39 வரை) “ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்” (வசனம் 39). ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே கொண்ட எலியாவின் ஜெபம் பரலோகத்தின் தேவனால் கேட்கப்பட்டது. வானத்திலிருந்து நெருப்பு  இறங்கி, தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் எரித்தது. பாகால் தீர்க்கதரிசிகளிடம் உழைப்பு, அர்ப்பணிப்பு, உற்சாகம், பக்தி, ஆற்றல் ஆகிய அனைத்தும் இருந்தன. ஆனால்…

October

பாவத்திலிருந்து திருப்புதல்

2024 அக்டோபர் 6 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,36 முதல் 37 வரை) “இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்” (வசனம் 36). எலியாவின் ஜெபம் இரத்தினச் சுருக்கமாக இருந்தது. இந்த ஜெபத்தின் வாயிலாக ஒரு தேவனுடைய மனிதனின் உள்ளக்கிடக்கையை அறிந்துகொள்கிறோம். அவன் உள்ளம் தேவனைக் குறித்த பக்கிவைராக்கியத்தால் நிறைந்திருந்தது. மெய்யான கடவுளைவிட்டு, பாகாலை வணங்கும் இழிச்செயலையும், அவர்களுடைய…

October

ஜெபத்தின் தொடக்கம்

2024 அக்டோபர் 5 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,36) “ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே” (வசனம் 36). “ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே” என்று எலியா தன் ஜெபத்தைத் தொடங்கினான். கர்த்தர் இவர்களோடு உடன்படிக்கை செய்திருந்தார். இவர்களுக்கு அளித்த உடன்படிக்கை மற்றும் வாக்குறுதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆகவே எலியா தேவனை உடன்படிக்கையின் கர்த்தராகவும் வாக்குறுதியின் தேவனாகவும் அழைத்தான். இதன் மூலமாக அவன் தேவனை வாக்குமாறாதவராகவும் பொய்யுரையாதவராகவும் கண்டான்.…

October

சிலுவையை நோக்கிப் பார்த்தல்

2024 அக்டோபர் 4 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,36) “அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து…” (வசனம் 36). “அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்தான்” (வசனம் 36). அதாவது எல்லாவற்றையும் ஆயத்தம் செய்துவிட்டு, எருசலேம் தேவாலயத்தில் மாலைநேர பலி செலுத்தப்படும் வரை காத்திருந்தான். இப்படிச் செய்வதன் வாயிலாக, எருசலேமில் தேவனை ஆராதிப்பவர்களை நினைவுகூர்ந்தான். ஆகாப் ராஜாவின் ஆவிக்குரிய இருண்ட நாட்களில் கர்த்தருக்காகப் பலிகளும் ஆராதனைகளும் இல்லாத ஓர் இடத்திலிருந்து, அவன் எருசலேமில்…

October

பொறுமையுடன் ஜெபித்தல்

2024 அக்டோபர் 3 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,34 முதல் 35 வரை) “பிற்பாடு அவன்: நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்” (வசனம் 34). எலியா ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின்மேல் அடுக்கி, நாலு குடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றினான். இங்கேயும் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அறிவுரைகள் இருக்கின்றன. கர்த்தருடைய பணி கர்த்தர் சொன்ன மாதிரியின்படி செய்யப்பட்டதுமட்டுமின்றி, அது அவசரப்படாமலும், நிதானமாகவும்…

October

தேவனுடைய ஒழுங்கைக் கடைப்பிடித்தல்

2024 அக்டோபர் 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,32 முதல் 33 வரை) “அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி” (வசனம் 32). எலியா வெட்டப்படாத கற்களைக் கொண்டு “கர்த்தருடைய நாமத்திற்கென்று” ஒரு பலிபீடத்தைக் கட்டினான். “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்”…