இளைப்பாறுதல் தரும் தேவன்
2024 அக்டோபர் 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,6 முதல் 7 வரை) “அப்பொழுது அவன் (எலியா), புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான்” (வசனம் 6). தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்ததையும் எலியா கண்டு, அவற்றைப் புசித்துக் குடித்துத் திரும்பவும் படுத்துக் கொண்டான். ஒரு தேவனுடைய மனிதனின் யதார்த்தமான செயல்களை எவ்வித மிகைப்படுத்தலும் இன்றி இருக்கிற வண்ணமாக வேதாகமம் பதிவு செய்திருக்கிறதைக் காண்கிறோம். வேதம் உண்மையை மட்டுமே பதிவு…