October

நமது பணியை நாமே செய்வோம்

2024 அக்டோபர் 31 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19:13 முதல் 14 வரை) “அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று” (வசனம் 13). தன் முகத்தை மூடிக்கொண்டிருந்த கர்த்தருடைய மனிதனாகிய எலியாவுக்கு மீண்டும் அவருடைய வார்த்தை, “எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்” என்னும் வடிவில் வெளிப்பட்டது. தன் முகத்தை மூடிக்கொண்டு தாழ்மையுடன் கர்த்தருடைய சமூகத்தில் நின்றுகொண்டிருந்த எலியாவுக்கு மீண்டும் கிருபையின் வாசல் திறக்கப்பட்டது. நீ நிற்க…

October

தாழ்மையின் வெளிப்பாடு

2024 அக்டோபர் 30 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 19,13) “அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான்” (வசனம் 13). கர்த்தருடைய மெல்லிய சத்தத்தை எலியா கேட்டவுடன் தன் முகத்தை மூடிக்கொண்டு குகையைவிட்டு வெளியே வந்து நின்றான். அவன் கர்த்தருடைய அந்த மெல்லிய சத்தத்தைக் கனப்படுத்தினான். தன் முகத்தை மூடிக்கொண்டு, தாழ்மையை வெளிப்படுத்தினான். வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு தரிசனத்துக்குப் பின்னரும், அங்கே அவர்கள் கர்த்ருக்கு முன்பாகத் தம்மைத்…

October

மௌனத்துக்குப் பின் மெல்லிய சத்தம்

2024 அக்டோபர் 29 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 19,11 முதல் 12 வரை) “அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்” (வசனம் 11). கர்த்தர் எலியாவுக்கு முன்பாகத் தம்முடைய பிரசன்னத்தைக் காண்பித்தார். “கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை” (வசனம் 11). முதலாவது தாம் இல்லாத இடத்தைக் காட்டினார். அதாவது அவர் பெருங்காற்றில் இல்லை;…

October

விசாலமான பார்வை

2024 அக்டோபர் 28 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,11) “அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்” (வசனம் 11). மனச்சோர்விலும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருந்த எலியாவுக்கு என்ன தேவை என்பதைக் கர்த்தர் அறிந்திருந்தார். அவரைப் பற்றிய புரிந்துகொள்ளுதலில் எலியாவுக்கு ஒரு மாற்றம்  தேவைப்படுகிறது என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே தன்னுடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பு தேவை என்பதை உணர்ந்து, அவனைக் குகையைவிட்டு வெளியே வரும்படி அழைத்து, பர்வதத்தில் நில்…

October

பொறுமையைக் கடைப்பிடிப்போம்

2024 அக்டோபர் 27 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,10) “இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்” (வசனம் 10). “இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்” (வசனம் 10). இந்த வசனத்திலிருந்து (10) இன்னும் ஒரு நாள் நம்முடைய சிந்தனையைத் தொடருவோம். எலியாவே இந்தக் குகையில் உனக்கு என்ன காரியம் என்று கர்த்தர் கேட்டதற்கு, அவன்…

October

உள்ளத்திலிருந்தது வெளியே வருதல்

2024 அக்டோபர் 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,10) “சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்” (வசனம் 9). “எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்” என்னும் கேள்விக்கான பதில் அவனது உள்ளான நிலையை வெளிப்படுத்திக் காட்டியது. “சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்று போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள்” (வசனம் 10)…

October

பொறுப்புக்கு உண்மையாயிருத்தல்

2024 அக்டோபர் 25 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,9) “அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்” (வசனம் 9). எலியா ஒரேப் மலையிலுள்ள ஒரு குகைக்குள் சென்று தங்கினான். மோசே கர்த்தருடைய மகிமையைத் தரிசித்த இடமாகவே இது இருக்கக்கூடும் என்று பெரும்பாலான வேத அறிஞர்கள் கூறுகின்றார்கள். எதுவாயிருந்தாலும் அவன் இன்னும் கர்த்தரோடு சீர்பொருந்த மனதற்றவனாக தன்னைத் ஒளித்துக்கொள்ளும்படியே…

October

தேவசமூகத்தை நாடுவோம்

2024 அக்டோபர் 24 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,8) “அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதம்மட்டும் நடந்துபோனான்” (வசனம் 8). எலியா தூதன் கொடுத்த அப்பத்தைச் சாப்பிட்டு, தண்ணீரையும் குடித்து, அந்த உணவின் பெலத்தால் நாற்பது நாள் நடந்தான். ஒருவேளை உணவு நாற்பது நாள் நடைபயணத்திற்கான ஆற்றலைக் கொடுக்குமா என்னும் கேள்வி நமக்கு எழலாம். ஒரு நாளைக்கு ஒருவேளை உணவோ அல்லது மூன்றுவேளை…

October

ஆலோசனைக் கர்த்தர்

2024 அக்டோபர் 23 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,7) “எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்” (வசனம் 7). “எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்” என்று தூதன் எலியாவிடம் கூறினான். இங்கே ஒரு மென்மையான கடிந்துகொள்ளுதலைக் காண்கிறோம். எலியாவே, நீ பயணப்பட வேண்டியவன், தூங்கியது போதும், எழுந்து புறப்படு என்பதாக தூதனுடைய கூற்று இருந்தது. சில நேரங்களில் நாமும் நமது சொந்தத் தோல்வியாலும், அதனால் ஏற்படுகிற விரக்தியினாலும் செல்ல வேண்டிய…

October

இருமுறை பேசுகிற தேவன்

2024 அக்டோபர் 22 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19:7) “கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்” (வசனம் 7). கர்த்தருடைய தூதன் இரண்டாம் முறை வந்து, எலியாவைத் தொட்டு எழுப்பினான். நாம் சோர்ந்துபோனாலும், தேவனோ அவரால் ஏற்படுத்தப்பட்ட பணியை நாம் முடிக்கும் வரைக்கும் தொடர்ந்து நம்மை உயிர்ப்பித்து எழுப்பிவிடுகிறவராக இருக்கிறார். “உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருக்கிறவர்”…