எதிரியை எதிர்கொள்ளுதல்
2024 நவம்பர் 10 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,7 முதல் 10 வரை) “அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பரையெல்லாம் அழைப்பித்து: இவன் பொல்லாப்புத் தேடுகிற விதத்தைக் கவனித்துப்பாருங்கள்…” (வசனம் 7). உன் வெள்ளியையும், உன் பொன்னையும், உன் ஸ்திரீகளையும், உன் குமாரர்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று பெனாதாத் கேட்டபோது தலையசைத்த ஆகாப், உன் கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு போவார்கள் என்று சொன்னபோது விழித்துக்கொண்டான். இது தன்மானத்துக்கு விழுந்த பேரிடி…