November

நாமத்தை விளங்கச் செய்தல்

2024 நவம்பர் 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,28 முதல் 29 வரை) “நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” (வசனம் 28). “கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல் மலைகளின் தேவனாயிருக்கிறார்” என்று சீரியர் கூறிய வார்த்தைகளை, தேவன் தம்மை நோக்கிக் கூறிய வார்த்தைகளாக எடுத்துக் கொண்டார். தேவனின் தன்மைகளைக் குறித்து எழுப்பப்படுகிற எந்தக் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்காமல்…

November

கர்த்தரைப் பற்றிய அறிவு

2024 நவம்பர் 19 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,28) “அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியினால் …” (வசனம் 28). தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து இஸ்ரவேலின் ராஜாவிடம் கர்த்தர் செய்யப்போகிற காரியங்களைக் குறித்து அறிவித்தான். இப்பொழுது வந்தது முன்னமே வந்த தீர்க்கதரிசி அல்ல. அடுத்த ஆண்டு பெனாதாத் படையெடுத்து வருவான் என்று முன்னறிவித்ததோடு அந்தத் தீர்க்கதரிசியின் வேலை முடிந்துவிட்டது.…

November

சிறியவர்களின் தேவன்

2024 நவம்பர் 18 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,26 முதல் 27 வரை) “மறுவருஷத்திலே பெனாதாத் சீரியரை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ண ஆப்பெக்குக்கு வந்தான்” (வசனம் 26). முன்னமே பெயர் அறியப்படாத ஒரு தீர்க்கதரிசி அறிவித்தவண்ணமாகவே சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் ஓராண்டு கழித்து பெரும்படையுடன் போருக்கு வந்தான். தீர்க்கதரிசி சொன்னபடியே காரியம் நடைபெற்றது. அவன் மெய்யான தீர்க்கதரிசி என்பது நிரூபணமாயிற்று. “வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை” (8,20)…

November

இருவிதமான அனுபவங்கள்

2024 நவம்பர் 17 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,23 முதல் 25 வரை) “நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம்பண்ணினால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம்” (வசனம் 23). இஸ்ரவேலின் தேவன் பெனாதாத்தின் ஊழியக்காரர்களுக்கு மலைகளின் தேவனாகத் தோன்றினார். நமக்கு யாராகத் தோன்றுகிறார்? நமது வாழ்க்கையில் அவரை எத்தகையவராகக் காண்கிறோம்? கிறிஸ்தவ வாழ்க்கை மேடுகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்ததாகவே இருக்கிறது. மலையுட்சியின் அனுபவங்களும் உண்டு, அதே வேளையில் பள்ளத்தாக்குகளின் அனுபவங்களும் உண்டு. ஒரு நாள் எலியாவைப் போல…

November

தவறானமதிப்பீடு

2024 நவம்பர் 16 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,23) “சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத் தேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம்பண்ணினால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம்” (வசனம் 23). தோற்றுப்போன பெனாதாத்தின் ஊழியர்கள் தாங்கள் பொய்யாய் வணங்குகிற தேவர்களைப் போலவே இஸ்ரவேலின் தேவனும் இருப்பார் என்று யூகித்துக்கொண்டார்கள். குறிப்பிட்ட சில வேலைகளுக்காகவும், இடங்களுக்காகவும் அவர்கள் தெய்வங்களை உண்டாக்கி வைத்திருந்தார்கள். அதாவது மலைக்கு…

November

சத்துருவுக்கு இடங்கொடாத வாழ்க்கை

2024 நவம்பர் 15 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,22) “பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான்” (வசனம் 22). பெயர் தெரியாத அந்தத் தீர்க்கதரிசி மீண்டும் ஆகாபுக்கு அறிவுரை கூறினார். பெனாதாத் மீதான வெற்றி இரு நாடுகளுக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்பதைத் தெரிவித்தான். ஒரு வெற்றிக்குப் பின்னர்…

November

ஞானிகளின் ஞானி

2024 நவம்பர் 14 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,16 முதல் 21 வரை) “ அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்” (வசனம் 18). மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகர்களும் அவர்களைப் பின்தொடர்ந்து வீரர்களும் மத்தியான நேரத்தில் பெனாதாத்தின் படைகளை எதிர்கொள்ளும்படி வெளியே வந்தார்கள். அந்த மத்தியான நேரத்திலும் பெனாதாத்தும், அவனோடுகூட துணைக்கு வந்த முப்பத்திரண்டு குறுநில மன்னர்களும் தாங்கள் தங்கியிருந்த கூடாரங்களில்…

November

வழிநடத்துகிற கர்த்தர்

2024 நவம்பர் 13 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,11 முதல் 15 வரை) “ பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்” (வசனம் 14). இன்னும் ஒருநாளுக்கான சிந்தனையை நேற்றைய வேதபகுதியிலிருந்தே தொடங்குவோம். கர்த்தர் உனக்கு வெற்றியைக் கொடுப்பார் என்று சொன்ன தீர்க்கதரிசியிடம், ஆகாப், “யாரைக்கொண்டு இந்த வெற்றியைக் கொடுப்பார்” என்று கேட்டான்; அதற்கு அவன்: “மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரைக்கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று பதிலளித்தான். ஆகாப்பின்…

November

இரக்கமுள்ள கர்த்தர்

2024 நவம்பர் 12 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,11 முதல் 15 வரை) இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” (வசனம் 13). நேற்றைய வேதபகுதியிலிருந்தே இன்றைக்கும் நம்முடைய சிந்தனையைத் தொடருவோம். பெயர் அறியாத அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. “இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர்…

November

சோதனையை எதிர்கொள்ளுதல்

2024 நவம்பர் 11 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,11 முதல் 15 வரை) “அதற்கு இஸ்ரவேலின் ராஜா பிரதியுத்தரமாக: ஆயுதம் தரித்திருக்கிறவன், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டலாகாது என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றான்” (வசனம் 7). ஆகாப் பெனாதாத்துக்கு ஞானமான ஒரு பதிலைச் சொல்லி அனுப்பினான். “ஆயுதம் தரித்திருக்கிறவன், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டலாகாது” என்பதே அந்த ஞானமுள்ள வார்த்தைகள். அதாவது போர் இன்னும் தொடங்கவேயில்லை, அதற்குள் வெற்றி பெற்றவனைப் போல வெற்றியைக் கொண்டாட வேண்டாம்…