November

தீய காரியங்களுக்கு விலகியிருப்போம்

2024 நவம்பர் 30 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,6 முதல் 7 வரை  “அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்” (வசனம் 7). ஆகாபின் மனைவி யேசபேல், “நீர் ஏன் சாப்பிடாமல் இருக்கிறீர்?” என்று கேட்டதற்கு, நான் நாபோத்திடம், “உன் திராட்சத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாய்க்கொடு; அல்லது உனக்கு ராசியானால் அதற்குப்…

November

தவறுகளுக்கு இடமளிக்க வேண்டாம்

2024 நவம்பர் 29 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,5) “அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து: நீர் போஜனம்பண்ணாதபடிக்கு, உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு …” (வசனம் 5). ஆகாப் என்ன நினைத்தானோ அது நடந்தது. தனது துக்கத்தை யாராவது விசாரிக்க மாட்டார்களா என்று நினைத்து கட்டிலில் விரக்தியோடு கிடந்தவனைக் கண்டு அவன் மனைவி யேசபேல் விசாரித்தாள். “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான்”…

November

வீண் வருத்தம் வேண்டாம்

2024 நவம்பர் 28 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,4) “இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய், தன் வீட்டிற்கு வந்து, போஜனம் பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்” (வசனம் 3). நாபோத் ராஜாவுக்குப் பயப்படுவதைக் காட்டிலும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான். ராஜாவைப் பிரியப்படுத்துவதைக் காட்டிலும் கர்த்தரைப் பிரியப்படுத்தினான். கர்த்தர் அருளிய சுதந்தரத்தை விட்டுக்கொடுப்பதைக் காட்டிலும்,…

November

சுதந்தரத்தைக் கட்டிக்காத்தல்

2024 நவம்பர் 27 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,3) “நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான்” (வசனம் 3). ஒரு குடியானவன் ஒரு ராஜாவை எதிர்கொள்வது எளிதான காரியம் அல்ல. ஆகவே இந்தக் காரியத்தில் கர்த்தர் எனக்கு உதவி செய்வாராக என்ற பொருளில் “கர்த்தர் என்னைக் காப்பாராக” என்று கூறினான். இன்றைய நாட்களில் ஒரு சட்டத்தின் மூலமாகவோ அல்லது ஒரு தீர்மானத்தின் மூலமாகவோ பொதுமக்களின்…

November

சட்டத்தை மீற வேண்டாம்

2024 நவம்பர் 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,1 முதல் 2 வரை) “ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, … என்றான்” (வசனம் 2). அரசன் ஆகாபின் அரண்மனைக்கு அருகில் நாபோத் என்னும் ஒர் ஏழைக் குடியானவனுக்குச் சொந்தமான திராட்சை தோட்டம் இருந்தது. ஆகாப் அதை தனது கீரைத்தோட்டமாக மாற்ற முயன்றான். மன்னன் விரும்பினால் அவனது எந்தத் தோட்டத்திலும் கீரை பயிரிடலாம், அதை எங்கிருந்தும்…

November

உண்மையின் ஊழியம்

2024 நவம்பர் 25 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,39 முதல் 43 வரை) “சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” (வசனம் 42). வாய்ப்புகளைத் தவறவிடுவதன் விலை அதிகம். ஆகாப் பெனாதாத்தைக் கொல்லும் வாய்ப்பைத் தவறவிட்டான். தீர்க்கதரிசியின் நண்பன் தன் கர்த்தருடைய சித்தத்தின்படி செயல்பட்ட தீர்க்கதரிசியை அடிக்கிற வாய்ப்பைத்…

November

சுயவெறுப்பின் ஊழியம்

2024 நவம்பர் 24 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,35 முதல் 38 வரை) “நீ கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனபடியால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்” (வசனம் 36). இப்பொழுது கர்த்தருடைய தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவன் வந்தான். இவன் ஏற்கெனவே வந்த தீர்க்கதரிசி அல்ல. நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறதைப் போல (மத்தேயு 12,35), கர்த்தர் தம்முடைய விசுவாச மக்களாகிய கருவூலத்திலிருந்து விதவிதமான மனிதர்களைப்…

November

வாய்ப்புகளை நழுவவிட வேண்டாம்

2023 நவம்பர் 23 (வேத பகுதி: 1 சாமுவேல் 22,2) “ அதற்கு அவன் (ஆகாப்), இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கை பண்ணி அவனை (பெனாதாத்) அனுப்பிவிட்டான்” (வசனம் 34). நானே கர்த்தர் என்று அறிந்துகொள்ளும்படி இந்தப் போரில் உனக்கு வெற்றியைத் தருவேன் என்று அவர் சொல்லியிருந்தார். ஆயினும் ஆகாப் தனக்கு வழங்கப்பட்ட கிருபையின் வாய்ப்பை தவறவிட்டது மட்டுமின்றி, அதைப் புறக்கணிக்கவும் செய்தான். அவன் கர்த்தரோடு சமாதானமாக இருப்பதற்குப்…

November

போலிகளை அடையாளம் காணுதல்

2024 நவம்பர் 22 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,32 முதல் 34 வரை) “இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து: என்னை உயிரோடே வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்பண்ணுகிறான் என்றார்கள்” (வசனம் 32). பெனாதாத்தின் வேலைக்காரர்கள் தங்களைத் தாழ்த்திக்கொள்வதற்கு அடையாளமாக, இரட்டைத் (சாக்குபோன்ற கரடுமுரடான துணி) தங்கள் இடுப்பில் கட்டி, தலைகளில் கயிறுகளைச் சுற்றிக்கொண்டு வந்தார்கள். இது தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கான தந்திரச் செயலே…

November

சரியான புரிதல் தேவை

2024 நவம்பர் 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,30 முதல் 31) “அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்” (வசனம் 31). இஸ்ரவேல் மக்களுக்கு எதிரான போரில், பெனாதாத் புறமுதுகிட்டு ஓடி, ஆப்பெக் நகரத்திற்குள் புகுந்து, ஓர் உள்ளறையிலே பதுங்கிக் கொண்டான். தேவனைப் பற்றிய எதிர்மறை எண்ணத்துடன் தேவனுடைய மக்களுக்கு எதிராகப் போடுகிற குறுகிய பார்வை கொண்ட தேவனற்ற அரசர்களின் முடிவு இவ்வாறாகத்தான் இருக்கும்…