May

ஆவியின் சமாதானம்

2024 மே 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,23 முதல் 28 வரை) “சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது” (வசனம் 23). மோசே உண்டாக்கிய ஆசரிப்புக்கூடாரத்தில் இருந்த கிருபாசனப் பெட்டியின் மீது இரண்டு சிறிய கேருபீன்கள் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை மாதிரியாகக் கொண்டு, இரண்டு பெரிய கேருபீன்களை சாலொமோன் மகாபரிசுத்த ஸ்தலத்தில் செய்துவைத்தான். ஒவ்வொன்றும் பத்து முழ உயரம் கொண்டதாக இருந்தது. இவ்விரண்டு கேருபீன்களின் இறக்கைகளும் ஏறத்தாழ…

May

உள்ளான பரிசுத்தம்

2024 மே 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,19 முதல் 22 வரை) “கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்துக்குள்ளே சந்நிதி ஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான்” (வசனம் 19). சாலொமோன் உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கு ஆலயத்துக்குள்ளேயே ஒரு பிரத்யேக இடத்தை ஆயத்தப்படுத்தினான். இது சந்நிதி ஸ்தானம் அல்லது மகா பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்பட்டது. இந்தியக் கோயில்களில் உள்ள கருவறையைப் போன்றது இது. “இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது” (எபிரெயர் 9,3) என்று…

May

அன்பெனும் அலங்காரம்

2024 மே 19 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,14 முதல் 18 வரை) “ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது” (வசனம் 18). “அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்” (வசனம் 14) என்னும் வாக்கியமானது அலங்கார வேலைக்கு முன், கற்களால் கட்டி முடிக்கப்பட்ட தகவலைச் சொல்லுகிறது. அதாவது ஒரு வீடு சிமெண்ட்டால் பூச்சு வேலை செய்வதற்கு முன், செங்கல்களால் கட்டி முடிக்கப்பட்ட…

May

மனிதரிடத்தில் வாசம்பண்ணுகிற தேவன்

2024 மே 18 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,11 முதல் 13 வரை) “இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்” (வசனம் 13). இஸ்ரவேல் நாடு சாலொமோன் என்னும் ராஜாவினால் ஆளுகை செய்யப்பட்டது. ஆயினும் அந்த ராஜா ராஜாதி ராஜாவாம் கர்த்தருடைய ஆளுகைக்கு கட்டுப்பட்டவராக நடக்க வேண்டும். இது சாலொமோனுக்கு மட்டுமின்றி, இஸ்ரவேல் நாட்டைப் பற்றிய பொதுவான தேவ திட்டமாக இருந்தது. ஆகவே ராஜா கீழ்ப்படிந்து நடந்துகொண்டால் ராஜாதி ராஜா…

May

கட்டுமான முறை

2024 மே 17 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,7 முதல் 10 வரை) “ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை” (வசனம் 7). சாலொமோன் ஆலயத்தைக் கட்டும் போது சுத்தியல் அல்லது உளி போன்ற இரும்புக் கருவிகளின் ஓசை எதுவும் அதன் வளாகத்தில் கேட்கப்படவில்லை. அதாவது ஆலயம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் அனைத்தும் வேறோர் இடத்தில்…

May

ஆலயத்தின் மாதிரி

2024 மே 16 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,2 முதல் 6 வரை) “சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபது முழ நீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது” (வசனம் 2). சாலொமோன் ஆலயத்தை அறுபது முழ நீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமும் இருக்கும்படி கட்டத் தொடங்கினான். இந்த அளவை யார் கொடுத்தது? தாவீது இந்த அளவையும் அதனுடைய மாதிரியையும் கர்த்தரிடமிருந்து பெற்று, அதைத் சாலொமோனுக்கு வழங்கினான்…

May

தேவனுடைய ஆலயம்

2024 மே 15 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,1) “இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்” (வசனம் 1). இந்த அதிகாரத்தின் முதல் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ஆண்டு விவரங்கள் நமக்குப் பல்வேறு விதமான வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கிறது. வேதாகமம் ஒரு புனை கதையோ அல்லது புராணக் கதையோ அன்று. அது வரலாற்றை இயக்குபவரின்…

May

மறைவானவற்றில் முக்கியத்துவம்

2024 மே 14 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 5,13 முதல் 18 வரை) “வெட்டின கல்லால் ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட, பெரிதும் விலையேறப்பெற்றதுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான்” (வசனம் 17). எருசலேமில் ஆலயம் கட்டும் பணியில் பலதரப்பட்ட மக்கள் பங்கு பெற்றார்கள் (இஸ்ரவேல் மக்களிலிருந்து வேலைக்காரர்கள், கானானிய வேலைக்காரர்கள், ஈராமின் வேலைக்காரர்கள், கிபலி ஊர் வேலைக்காரர்கள்). ஓர் உள்ளூர் திருச்சபை திறம்படக் கட்டப்பட வேண்டும் என்றால், அதன் அனைத்து விசுவாசிகளின் ஒத்துழைப்பும் அவசியம். சாலொமோன் ஆலயம்…

May

பிறருக்காக நன்றிசெலுத்துதல்

2024 மே 13 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 5,7 முதல் 12 வரை) “அந்த ஏராளமான ஜனங்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள குமாரனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி” (வசனம் 7). ஆலயம் கட்டுவதற்காக உதவி வேண்டும் என்னும் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்ட போது, ஈராம் மிகவும் சந்தோஷப்பட்டான். கர்த்தருக்காகவும் அவருடைய ஊழியத்துக்காகவும் பிறர் எடுக்கிற முயற்சியைக் கண்டு நாமும் மகிழ்ச்சியடையவும், குறிப்பாக உதவி கேட்டுவரும்போது நம்மால் இயன்ற உதவிகளை மனமுவந்து…

May

சமாதானகால வளர்ச்சி

2024 மே 12 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 5,1 முதல் 6 வரை) “ஆனாலும் இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை” (வசனம் 4). தாவீது ஆட்சியில் இருந்த சகலநாள்களிலும் தீருவின் ராஜாவாகிய ஈராம் நண்பனாயிருந்தான். இஸ்ரவேலின் எதிரிகளுக்கு தாவீது ஒரு வலிமைமிக்க போர்வீரனாக விளங்கினாலும், அண்டை நாடுகளிலுள்ள சில நல்ல உள்ளங்களுக்கு உற்ற நண்பனாகவும் இருந்தான். நமக்கு விரோதமாக இராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்று…