May

பரலோகத்தில் வசனம்

2024 மே 31 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 8,7 முதல் 51 வரை) “மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை” (வசனம் 9). வனாந்தரத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கைப் பெட்டி பல பயணங்களைக் கடந்து, பல இடங்களைக் கண்டு, இறுதியாக சாலொமோன் கட்டிய தேவாலயத்தில் மகா பரிசுத்த ஸ்தலமாகிய தன்னுடைய இருப்பிடத்தை வந்தடைந்தது. இனிமேல் இது இங்கிருந்து ஆசாரியர்களாலும் மக்களாலும் அதிகாரப்பூர்வமாக எங்கும் கொண்டு செல்லப்படப்போவதில்லை. உடன்படிக்கைப் பெட்டியின்…

May

தெய்வீகப் பிரசன்னம்

2024 மே 30 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 8,1 முதல் 6 வரை ) “அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்” (வசனம் 6). ஆலயமும் அதைச் சார்ந்த சகல வேலைகளும் முடிந்த பிறகு, சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர்களையும், மக்களையும் கூட்டி, திறப்பு விழா நடத்தினான். ஒலிம்பிக் போன்ற உலகளாவிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது…

May

தெய்வீகச் சட்டங்கள்

2024 மே 29 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 7,48 முதல் 51 வரை) “பின்னும் கர்த்தருடைய ஆலயத்துக்குத் தேவையான பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்” (வசனம் 48). ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கவேண்டிய பணிமுட்டுகளை எல்லாம் சாலொமோன் பொன்னால் உருவாக்கினான். அதாவது பலிபீடம், சமுகத்தப்ப மேசை, குத்துவிளக்கு, தூபகலசம், மற்றும் இன்னபிற பொருட்கள் யாவும் பசும்பொன்னால் உருவாக்கப்பட்டன. இவை தேவனுடைய தெய்வீகத்தை வலியுறுத்துகின்றன. மேலும் பலிபீடம் கிறிஸ்துவின் சுகந்தவாசனையான பலியையும், சமுகத்தப்ப மேசை அவருடனான ஐக்கியத்தையும், அவருடைய…

May

அளவிடமுடியாத ஐசுவரியம்

2024 மே 28 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 7,40 முதல் 47 வரை) “இந்தச் சகல பணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்தபடியால், சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை; அதினுடைய நிறை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை” (வசனம் 47). ஈராம் செய்த பொருள்களின் பட்டியல்  இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கொப்பரைகள், சாம்பல் எடுக்கிற கரண்டிகள், கலங்கள், இரண்டு தூண்கள், தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்கள், இரண்டு வலைப்பின்னல்கள், இரண்டு வரிசை மாதளம்பழங்கள், பத்து ஆதாரங்கள், ஆதாரங்களின்மேல் வைத்த…

May

வேலையைப் பகிர்ந்துகொள்ளுதல்

2024 மே 27 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 7,27 முதல் 39 வரை) “பத்து வெண்கல ஆதாரங்களையும் (நகர் வண்டிகள்) செய்தான்” (வசனம் 27). ஆசரிப்புக்கூடாரத்தில் இல்லாத பொருள்களில் ஒன்று இந்த நகர் தள்ளுவண்டிகள். பெரிய வெண்கலக் கடல் தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவர இந்த தள்ளுவண்டிகள் பயன்படுத்தப்பட்டன. வனாந்தரத்திலிருந்த ஆசரிப்புக்கூடாரத்தில் இந்த வண்டிகள் இல்லாவிட்டாலும், கூடாரத்தைப் பெயர்த்துக் கொண்டுபோகும்போது, அதனுடைய பணிமுட்டுகளை தூக்கிச் செல்வதற்கு மோசே வண்டிகளைச் செய்திருந்தான். இதை நினைவில் கொண்டு, ஆலயத்துக்குள் பொருட்களை குறிப்பாக…

May

சுத்திகரிப்பின் அவசியம்

2024 மே 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 7,23 முதல் 26 வரை) “வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வார்ப்பித்தான்” (வசனம் 23). ஆசரிப்புக்கூடாரத்தில் வெண்கலத்தால் இருந்த தொட்டிக்குப் பதிலாக, இங்கே தேவாலயத்தில் வெண்கலக் கடல் என்னும் தொட்டியை சாலொமோன் உருவாக்கினான். அதிகப்படியான கொள்ளளவுள்ள தண்ணீரை ஊற்றி வைக்கமுடிவதால் இது கடல் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இது நம்முடைய வீடுகளில் பயன்படுத்துகிற கிண்ணங்களைப் போன்று வட்ட வடிவத்திலானது, ஆனால் இரண்டாயிரம் குடம் நீர் நிரப்பும் அளவுக்கு மிகப்…

May

ஸ்தாபிதமும் பெலனும்

2024 மே 25 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 7,13 முதல் 22 வரை) “அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலது புறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான்” (வசனம் 1). மோசே ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டும்போது, அதற்கு வேண்டிய வெண்கல வேலைகளைச் செய்வதற்கு பெசலெயேல் என்னும் ஒரு மனிதனை ஆவியானவர் எழுப்பினார். “அவன் விநோதமான வேலைகளை யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும்,…

May

முன்னுரிமை பற்றிய காரியம்

2024 மே 24 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 7,1 முதல் 12 வரை) “சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்க பதின்மூன்று வருஷம் சென்றது” (வசனம் 1). சாலொமோன் ஆலயத்தைக் கட்டுவதற்கு எடுத்துக்கொண்ட காலத்தைக் காட்டிலும் தன் அரண்மனையைக் கட்டுவதற்கு ஏறத்தாழ இருமடங்கு காலத்தை எடுத்துக்கொண்டான். இதன் மூலம் அவன் ஆலயத்தை அவசரகதியில் கட்டினான் என்றோ, அரண்மனையை பொறுமையுடன் நிதானமாகக் கட்டினான் என்றோ நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, அவன் ஆலயத்தை விரைவாகக்…

May

முடிக்கப்பட்ட பணி

2024 மே 23 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,31 முதல் 38 வரை) “நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு, பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது” (வசனம் 37 முதல் 38). ஆசரிப்புக் கூடாரத்தில் மகாபரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்வதற்கு திரை இருந்தது. ஆனால் தேவாலயத்தில் அந்த ஸ்தலத்துக்குள் நுழைவதற்கு கதவுகள் உண்டாக்கப்பட்டன. இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்லும்…

May

ஒழுங்கும் கிரமமும்

2024 மே 22 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 6,29 முதல் 30 வரை) “ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்” (வசனம் 29). தங்கத் தகடுகளால் மூடப்பட்ட தேவாலயத்தின் சுவர்கள் பாதுகாப்பை வழங்கும் கேருபீன்கள், புசிக்கிறவனுக்கு ஆற்றலைத் தரும் பேரீச்சை மரங்கள், மற்றும் கடவுளுடைய சிருஷ்டிப்பின் மகிமையையும் அழகையும் வெளிப்படுத்தும் மலர்ந்த மலர்கள் ஆகியவற்றின் சித்திர வேலைப்பாடுகள் கொண்டதாக விளங்கின. சுவர்கள் நல்ல கலை…