June

ஆத்துமாவைக் காத்துக்கொள்ளுதல்

2024 ஜூன் 20 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 9:15-28) “பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்” (வச. 15). சாலொமோன் ஒரு மாபெரும் கட்டடப் பொறியாளர் மட்டுமின்றி, ஒரு சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினான். இந்த நிர்வாகத் திறமையால் தன்னுடைய ராஜ்யத்தைப் பலப்படுத்தினான். அவனுடைய ஆட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழ்ந்த இஸ்ரவேலர் அல்லாத பூர்வீகக் குடிமக்களைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள அறிந்திருந்தான்.…

June

உதாரத்துவமான பங்களிப்பு

2024 ஜூன் 19 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 9:10-14) “தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்” (வச. 11). தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதுக்கும் சாலொமோனுக்கும் உற்ற நண்பனாக விளங்கினான். ஆலயம் கட்டுவதற்கும், அரண்மனைகள் கட்டுவதற்கும் தேவையான மரங்களை தனது நாட்டிலிருந்து சாலொமோனுக்கு தாராளமாக அனுப்பி வைத்து உதவினான். சாலொமோன் இதற்கு கைமாறாக தன்னுடைய நாட்டிலிருந்த இருந்த இருபது பட்டணங்களை ஈராமுக்கு வெகுமதியாக வழங்கினான். சாலொமோனின் இந்தச் செயல் நல்லதன்று.…

June

சிட்சையின் ஆயுதம்

2024 ஜூன் 18 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 9:6-9) “நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி” (வச. 6). பின்வாங்கிப் போகுதல் கர்த்தருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் நேரிடுகிற ஒரு துக்கமான நிகழ்வாகும். ஏதோ சில காரணங்களால் ஒரு கர்த்தருடைய பிள்ளை அவரோடுள்ள ஐக்கியத்தை விட்டு விலகிச் செல்வதே பின்மாற்றம் ஆகும். கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்துவதையோ அல்லது இடையில் நின்றுவிடுவதையோ பின்மாற்றம் எனலாம். இச்சமயங்களில் ஒரு விசுவாசி கர்த்தருடைய சமூகத்தின் ஐக்கியத்தையும் இரட்சிப்பின் சந்தோஷத்தையும் இழந்துபோகிறான். நாம் இந்தப்…

June

கிருபையைப் பற்றிக்கொள்ளுதல்

2024 ஜூன் 17 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 9:4-5) “உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால்” (வச. 4). கர்த்தர் சாலொமோனுக்குத் தரிசனமாகி, அவனுக்குப் பதில் அளித்தபோது, அவன் தொடர்ந்து அவருடைய ஆசீர்வாதத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு சில நிபந்தனைகளையும் விதித்தார். பழைய உடன்படிக்கையில் ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதை அடிப்படையாகக் கொண்டது. ஆயினும் அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதைக் குறித்து ஒரு சர்வாதிகாரியைப் போல தேவன் நடந்துகொள்ளாமல், ஒரு கிருபையுள்ள தகப்பனைப் போலவே இஸ்ரவேல் மக்களிடத்தில் நடந்துகொண்டார் என்பதையும்…

June

பதில்பெறும் பாக்கியம்

2024 ஜூன் 16 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 9:3-5) “கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்” (வச. 3). சாலொமோன் பரலோகத்தின் தேவனை நோக்கி ஒரு நீண்ட ஜெபத்தை ஏறெடுத்தான். இதனாலேயே அது சிறந்த ஜெபமாக மாறிவிடுவதில்லை. மாறாக, “நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்” என்று கர்த்தர் பதில் அளித்ததினாலேயே அது சிறந்த ஜெபமாகக் கருதப்படுகிறது. நீண்ட ஜெபமோ அல்லது…

June

புதிய தரிசனம், புதிய உற்சாகம்

2024 ஜூன் 15 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 9:1-2) “கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார்” (வச. 2). சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தனக்கான அரண்மனைகளையும், தான் செய்ய வேண்டும் என்று விரும்பிய அனைத்தையும் கட்டி முடித்தபோது, கிபியோனிலே தரிசனமானதுபோல இரண்டாந்தரம் கர்த்தர் அவனுக்கு தரிசனமானார். இதற்குள்ளாக ஏறத்தாழ அவனுடைய ஆட்சிக் காலத்தில் இருபத்தினான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆட்சிக்கு வந்த தொடக்க காலத்தில் தரிசனமான தேவன், அவன் தன் வேலைகளையெல்லாம் முடித்த தருணத்திலும் தரிசனமானார்.…

June

நேரத்தைக் குறைக்க வேண்டாம்

2024 ஜூன் 14 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:62-66) “நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழு நாளும், அதற்குப்பின்பு வேறே ஏழு நாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்” (வச. 65). சாலொமோன் தேவாலயப் பிரதிஷ்டையை கூடாரப் பண்டிகையின் நாட்களில் நடத்தினான். பொதுவாக ஏழு நாட்கள் நடைபெறும் கூடாரப் பண்டிகை, இந்த முக்கியமான சமயத்தில் பதினான்கு நாட்களாக நீடித்தது (உபா. 16:13-17; வசனம் 65). நீட்டப்பட்ட காலம் மட்டுமின்றி, செலுத்தப்பட்ட பலிகளின் மிகுதியும் அதாவது பலியிடப்பட்ட…

June

உண்மையுள்ள தேவன்

2024 ஜூன் 13 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:55-61) “அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை” (வச. 55). விசுவாசிகளின் உரையாடல்களில் எப்பொழுதும் இடம்பெறக்கூடிய ஒரு முக்கியமான பொருள் இருக்குமாயின் அது கர்த்தருடைய உண்மைத் தன்மையைக் குறித்ததாகும். அவர் இஸ்ரவேல் மக்களுக்காக என்னவெல்லாம் செய்வேன் என்று மோசேயிடம் சொல்லியிருந்தாரோ அது முற்றிலும் நிறைவேறிற்று. அதை சாலொமோன் நினைவுகூர்ந்து மக்களிடம் தெரிவித்தான் (வச. 56). மோசேயின் சீடன் யோசுவாவும் தன்னுடைய…

June

தாழ்மையின் மேன்மை

2024 ஜூன் 12 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:54) “அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததை விட்டெழுந்து” (வச. 54). சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து தன்னுடைய ஜெபத்தைத் தொடங்கினான் (வசனம் 22). ஆனால் அவன் தன்னுடைய நீண்ட ஜெபத்தை முடிக்கும்போது, “முழங்கால்படியிட்டிருந்ததை விட்டெழுந்தான்” (வசனம் 54) என்று வாசிக்கிறோம். தம்முடைய மக்களுக்காக ஏறெடுத்த ஜெபம் கேட்கப்படும்படியாய் ராஜாவாகிய…

June

இரக்கத்தின் மேன்மை

2024 ஜூன் 11 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:44-53) “பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே” (வச. 46). இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும் போது, அவர்கள் இந்த ஆலயத்தை நோக்கி ஜெபித்தால் அவர்களுக்கு வெற்றி தரும்படி சாலொமோன் விண்ணப்பம் பண்ணினான். இங்கே நாம் கவனிக்க வேண்டிய காரியம் “நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியில்” (வசனம் 44) என்ற சொற்றொடர் ஆகும். எல்லா இடங்களிலும் எல்லாப் போர்களிலும் அல்ல, கர்த்தர் எங்கே அனுப்புகிறாரோ அங்கே வெற்றியைத் தரும்படி…