திருப்தியுள்ள வாழ்க்கை
2024 ஜூன் 30 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 10,26 முதல் 29 வரை) “எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்” (வசனம் 27). எருசலேமில் வெள்ளி கற்களைப் போலவும், கேதுருமரங்கள் பள்ளத்தாக்குகளில் இருக்கிற காட்டத்தி மரங்களைப் போலவும் மிகுதியாக இருந்தன என்னும் வார்த்தைகள் சாலொமோனின் செல்வச் சிறப்பைப் பறைசாற்றும் வார்த்தைகளாகும். சாலைகளில் வெள்ளிப் பாளங்கள் கொட்டிக் கிடந்தன என்று நாம் இதை அர்த்தப்படுத்தக்கூடாது. மாறாக, கற்கள் எவ்வளவு மலிவாகவும் மிகுதியாகவும்…