மெய்யான அரசர்
2024 ஜூலை 11 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 12,1 முதல் 15 வரை) “முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனைபண்ணி…” (வசனம் 8). சாலொமோனின் மகன் ரெகொபெயாம் அவன் தந்தையின் ஸ்தானத்தில் அரசனாகப் பதவியேற்றான். நாம் இந்த உலகத்தில் நிரந்தரமாக உயிரோடு இருக்கப்போவதில்லை. நாம் வகிக்கிற பதவியையோ, பொறுப்பையோ அல்லது சொத்துகளையோ நமக்குப் பின்வரும் சந்ததிக்கு விட்டுச் செல்கிறோம் என்பதே உண்மை. சாலொமோன் இந்தக்…