கீழ்ப்படியாத அரசன்
2024 ஜூலை 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,31 முதல் 34 வரை) “யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று” (வசனம் 34). அற்புதமான நிகழ்வுக்குப் பிறகும் யெரொபெயாம் தனது தீய வழியை விட்டுத் திரும்பவில்லை. கர்த்தருடைய எச்சரிப்புகள் அவனுக்கு இரும்புச் சுத்தியலின் அடியைப் போல வந்தன; ஆயினும் குளிர்ந்துபோன இரும்பில் அடித்ததுபோல அவன் இருதயம் மனந்திரும்புதலுக்கு இடம் கொடுக்கவில்லை. அவன் முன்னிருந்ததைக் காட்டிலும் மோசமானதைச் செய்தான். தன்…