July

நல்ல வழியில் செல்வோம்

2024 ஜூலை 31 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 15,25 முதல் 34 வரை) “(பாஷா) கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்” (வசனம் 34). இந்த வேதபகுதி, யெரொபெயாமின் குமாரன் நாதாப் இஸ்ரவேலின் அரசனாகப் பதவி ஏற்றான் என்று தொடங்குகிறது. இவன் தன் தந்தையின் வழியைப் பின்பற்றி கர்த்தருக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டான். தந்தையின் பாவ வழியையே இவனும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை,…

July

வாழ்வின் முடிவுவரை

2024 ஜூலை 30 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 15,22 முதல் 24 வரை) “ஆசா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்” (வசனம் 24). அபியாவுக்குப் பின் அவனுடைய குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது (2 நாளாகமம் 14,1). ஆசா மொத்தமாக நாற்பத்தொரு ஆண்டுகள் அரசாட்சி செய்தான். அதில் கால் பகுதி காலங்கள் அவன் கர்த்தருக்குப் பயந்து நடந்தான். எவ்வித போர்களும்…

July

தேவன் எதிர்பார்க்கிற உத்தமம்

2024 ஜூலை 29 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 15,16 முதல் 21 வரை) “ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடிக்கு, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்” (வசனம் 17). இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய யெரொபெயாம் தன்னுடைய ஆட்சியின் கீழுள்ள மக்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி எருசலேமுக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே பொன் கன்றுக்குட்டிகளைச் செய்து பெத்தேலிலும் தாணிலும் நிறுவி, அவற்றைத் தொழுதுகொள்ளும்படி ஏற்பாடு செய்தான் (1 ராஜாக்கள் 12,28 முதல் 30 வரை).…

July

ஆவிக்குரிய மறுமலர்ச்சி

2024 ஜூலை 28 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 15,9 முதல் 14 வரை) “இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபதாம் வருஷத்திலே ஆசா யூதாவின்மேல் ராஜாவாகி, நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்” (வசனம் 9 முதல் 10). சாலொமோனின் கொள்ளுப்பேரனாகிய ஆசா, தனது தந்தை அபியாமின் குறுகியகால ஆட்சிக்குப் பிறகு, இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் யூதாவின் ராஜாவாக அரியணையில் அமர்ந்தான். யூதாவை ஆட்சி செய்த நல்ல ராஜாக்களில் இந்த ஆசாவும் ஒருவன். இவன்…

July

கிருபையைப் புறக்கணித்தல்

2024 ஜூலை 27 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 15,1 முதல் 8 வரை) “யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின்மேல் ராஜாவாகி, மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்” (வசனம் 1 முதல் 2). சாலொமோனின் மகன் ரெகொபெயாம் இறந்தான். அவனுக்குப் பின் அவனுடைய குமாரன் அபியாம் அரியணையில் அமர்ந்தான். ரெகொபெயாமுக்கு இருபத்தியெட்டு மகன்கள் இருந்தார்கள். பதினெட்டு மனைவிகளில் தந்தையால் நேசிக்கப்பட்ட மாகாளின் மகனாகிய அபியாமுக்கு தேவ கிருபையால் அரசப் பதவி கிடைத்தது (காண்க:…

July

பரிசுத்தத்தில் கலப்படம்

2024 ஜூலை 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 14,21 முதல் 31 வரை) “சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம்பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள்” (வசனம் 18). இப்பொழுது கதை இஸ்ரவேல் நாட்டிலிருந்து யூதா நாட்டிற்குத் திரும்புகிறது. இங்கே சாலொமோனின் மகன் ரெகொபெயாம் ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கிறான். இவனுடைய தாயின் பெயர்…

July

வாழ்க்கையின் முடிவு

2024 ஜூலை 25 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 14,17 முதல் 20 வரை) “கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்” (வசனம் 18). கர்த்தர் அகியாவின் மூலமாக உரைத்தது நிறைவேறியது. யெரொபெயாமின் மனைவி தன் வீட்டுக்குள் நுழையும் தருணத்தில் அவளுடைய மகன் அபியா இறந்தான். இவனுடைய மரணத்துக்காக இஸ்ரவேலர் எல்லாரும் துக்கங்கொண்டாடினார்கள். ஆவிக்குரிய இருளான சூழ்நிலையில், தன் வாழ்க்கையின் மூலமாக…

July

உண்மையுள்ளவனின் சிலாக்கியம்

2024 ஜூலை 24 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 14,10 முதல் 16 வரை) “யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமின் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான்” (வசனம் 13). கர்த்தர் அகியாவின் மூலமாக யெரொபெயாமுக்கும் அவன் சந்ததிக்கும் நேரிடப்போகிற அழிவை முன்னறிவித்தார். நாம் பாவம் செய்யும்போது, அது நமக்கு இனிமையாகத் தோன்றும், அதற்கான விளைவை அனுபவிக்கும்போதோ அது கசப்பானதாக இருக்கும். விக்கிரக ஆராதனை செய்கிறவன் கர்த்தருக்கு விரோதமாகப்…

July

ஏமாற்றுகிறவன் ஏமாற்றமடைவான்

2024 ஜூலை 23 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 14,4 முதல் 9 வரை) “அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்தான்” (வசனம் 4). யெரொபெயாமின் மனைவி தன் கணவன் யெரொபெயாம் சொன்னபடியே மாறுவேடத்தில் தீர்க்கதரிசியைச் சந்திக்கச் சென்றாள். ஆனால் இந்தச் சமயத்தில் அகியா வயது முதிர்ந்தவனாக கண்கள் மங்கலடைந்து எதிரே உள்ளவர்களைத் தெளிவாகப் பார்க்க இயலாதவனாக இருந்தான்.…

July

இரட்டை நிலை

2024 ஜூலை 22 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 14,1 முதல் 3 வரை) “அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்” (வசனம் 1). கீழ்ப்படியாத யெரொபெயாமுக்கு கர்த்தர் தம்முடைய நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கினார். யெரொபெயாமின் மகன் அபியா நோய்வாய்ப்பட்டான். யெரொபெயாம் ஒரு ராஜாவாயிருந்தாலும், எல்லா மனிதருக்கும் இருக்கிற பிரச்சினை அவனுக்கும் வந்தது. மனிதனாய் பிறக்கிற எவனும், அவன் ஆதாமுக்குள் இருக்கிறபடியால், அவன் வியாதிக்கு அப்பாற்பட்டவன் அல்ல. சில நேரங்களில் கர்த்தர் தமது நோக்கத்தை நிறைவேற்ற…