குறைவுகளில் நேசித்தல்
2024 ஜனவரி 1 (வேத பகுதி: 2 சாமுவேல் 1,1 முதல் 16 வரை) “ஜனங்களில் அநேகம்பேர் விழுந்து மடிந்துபோனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள்” (வசனம் 4). சவுல் தன் அரச பொறுப்பை நன்றாகத் தொடங்கினான் (1 சாமுவேல் 10,23), அவனுடைய முடிவோ துக்கமானதாக மாறியது. எல்லாருடைய தோளுக்கும் உயரமாக இருந்தவன், கில்போவா மலைமேட்டில் தன் கிரீடத்தை விடாப்பிடியாக பற்றிக்கொண்டவனாக சரிந்து விழுந்தான். பழைய ஏற்பாட்டுச் சம்பவங்கள் நமக்குத் திருஷ்டாந்தங்களாகச் சொல்லப்பட்டுள்ளன எனக் கூறி,…