சதித்திட்டங்களை விட்டு விலகுவோம்
2024 டிசம்பர் 1 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,8 முதல் 10 வரை “அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள்” (வசனம் 8). நாபோத்தின் பரம்பரைச் சொத்தை தவறான முறையில் அபகரிப்பதற்காக யேசபேல் மிகவும் கொடூரமான ஒரு சதித்திட்டத்தை திட்டமிட்டாள். முதலாவதாக, அவள் போலியான கடிதம் ஒன்றை எழுதினாள். “அவள் ஆகாபின் பெயரில் கடிதங்களை எழுதி,…