கிருபையின் ஐசுவரியம்
2024 டிசம்பர் 11 வேத பகுதி: 1 ராஜாக்கள் 21,27 முதல் 29 வரை “ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான் ” (வசனம் 27). ஆகாப் எலியாவைக் கண்டபோது முதலாவது அதிருப்தி அடைந்தான். ஆனால் கர்த்தருடைய பயங்கரமான தண்டனையைக் கேட்டபோது மிகவும் பாதிக்கப்பட்டான். உடனே, தான் அணிந்திருந்த ராஜாவுக்குரிய ஆடைகளைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் துக்க நாட்களில் அணியும் இரட்டைப் போர்த்துக்கொண்டு…