December

நற்பாதையைத் தெரிந்துகொள்வோம்

2024 டிசம்பர் 31 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,50 முதல் 53 வரை)  “யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்” (வசனம் 50). இந்த ஆண்டின் (2024) இறுதி நாளிலே, முதலாம் ராஜாக்களின் இறுதிப் பகுதிக்கு நாம் வந்திருக்கிறோம். இந்தப் புத்தகம் கூறும் பல்வேறு அனுவங்களைக் கடந்து வந்திருக்கிறோம். பல நிலைகளில் இந்தப் புத்தகம் விவரிக்கும் பல்வேறு ராஜாக்களின் கதைகள் மற்றும்…

December

தோல்வியிலிருந்து பாடம்

2024 டிசம்பர் 30 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,47 முதல் 49 வரை)  “அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூடக் கப்பல்களிலே போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை” (வசனம் 49). யோசபாத் தன் தகப்பனாகிய ஆசா முடிக்காமல் விட்டிருந்த வேலையை இப்பொழுது செய்யத் தொடங்கினான். அதாவது தேசத்தில் இருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரைத் தேசத்திலிருந்து துரத்திவிட்டான். இத்தகைய மக்களின்மீது ஆதிமுதலாகவே தேவனுடைய கோபம் இருந்திருக்கிறது. இது ஆன்மீக ரீதியில்…

December

சமாதானம் ஓதும் கிறிஸ்து

2024 டிசம்பர் 29 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,44 முதல் 46 வரை)  “யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடே சமாதானமாயிருந்தான்” (வசனம் 44). யோசபாத் தனிப்பட்ட ஒருவனாய் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தேசத்தில் பலவிதமான ஆன்மீகச் சீர்திருத்தங்களைச் செய்தாலும், மக்களின் நிலைமையோ சிறப்பானதாக இல்லை. மக்கள் மேடைகளில் இன்னும் அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டிவந்தார்கள் என்று வாசிக்கிறோம் (வசனம் 43). விசுவாசிகளின் ஆவிக்குரிய உயிர்மீட்சிக்காக தலைவர்கள் தொடர்ந்து பாடுபட்டாலும், ஆவிக்குரிய சிறப்புக் கூட்டங்களை நடத்தி ஆலோசனைகள் அருளினாலும்…

December

செம்மையானதைச் செய்தல்

2024 டிசம்பர் 28 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,43)  “அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்” (வசனம் 43). யோசபாத்தின் தந்தை ஆசாவும் கர்த்தருக்குப் பயந்த ஒரு மனிதனாக விளங்கினான். தந்தையின் தாக்கம் யோசபாத்திடம் காணப்பட்டது. ஆசா கர்த்தருடைய வழியில் நடந்தான், அதைப் பின்பற்றி அவனுடைய மகன் யோசபாத்தும் கர்த்தருடைய வழியில் நடந்தான். ஆசாவின் வாழ்க்கை முறையைப் பார்த்து வளர்ந்த யோசபாத், தானும்…

December

கர்த்தருடைய பணியில் கால் நூற்றாண்டு

2024 டிசம்பர் 27 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,41 முதல் 42 வரை  “யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்” (வசனம் 42). ஆகாப் மற்றும் யோசபாத்தின் கூட்டுறவைப் பற்றி  ஏற்கனவே சொல்லப்பட்டிருப்பினும், ஆகாபின் மரணத்திற்குப் பின்னரே, யோசபாத்தைப் பற்றிய மிகச் சுருக்கமான விவரங்கள் இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன (2 நாளாகமப் புத்தகத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன). யோசபாத் யூதாவை ஆண்ட தேவபக்தியுள்ள ஓர் அரசன். ஆகாபின் மரணத்திற்குப்பின் அவன் கர்த்தருடைய காரியங்களில்…

December

பின்பற்றக்கூடாதவனின் மரணம்

2024 டிசம்பர் 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,38 முதல் 40 வரை)  “அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது, கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கினது” (வசனம் 38). இறுதியில் ஆகாப் மரணமடைந்தான். அவனது மரணத்தில், பெயர் அறியாத ஒரு தீர்க்கதரிசியின் வாக்கு நிறைவேறியது. “சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும்” (1 ராஜாக்கள் 20,42)…

December

அலட்சியத்தால் வந்த அகால மரணம்

2024 டிசம்பர் 25 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,35 முதல் 37 வரை)  “அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்” (வசனம் 35). ஆகாப் ஒரு பெரிய போர் வீரன். ஆயினும் அவன் கர்த்தரைப் பின்பற்றாததாலும், பாகால் வணக்கத்தைப் பின்பற்றியதாலும், தேவபக்தியற்ற மனைவியின் தீமையான வழிநடத்துதலுக்கு இணங்கியதாலும் அவனுடைய  முடிவு பரிதாபத்திற்குரிய ஒன்றாக மாறியது. ஆகாப் கர்த்தருடைய தயவால் பல வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அவன் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதில்…

December

பழிவாங்கப்பட்ட ஜீவன்

2024 டிசம்பர் 24 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,34)  “ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது” (வசனம் 34). ஒருவனால் நினையாமல் நாணேற்றி எய்யப்பட்ட வில் இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் துல்லியமாக எவ்வாறு பட்டது? இது ஒரு தற்செயல் நிகழ்வுபோல் தோன்றினாலும் அது சர்வ வல்லமையுள்ள தேவனால் திட்டமிடப்பட்டது. ஒருவன் தற்செயலாய் வில்லை எய்தான், ஆனால் அது பாவியைத் தேடுகிற தேவனுடைய ஏவுகணை போல ஆகாபின்…

December

பாதுகாக்கப்பட்ட ஜீவன்

2024 டிசம்பர் 23 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22:32 முதல் 33 வரை)  “இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டு அவனைவிட்டு, விலகிப்போனார்கள்” (வசனம் 33). ஆகாப் மற்றும் யோசபாத் இருவரும் போரிடச் சென்றார்கள். ஆகிலும் யோசபாத் மட்டுமே ராஜ வஸ்திரம் அணிந்தவனாய் போர் முனையில் நின்றான். எதிரியோ ராஜாவை மட்டுமே தாக்குங்கள் என உத்தரவிட்டிருந்தான். தேவபயமற்ற ராஜாவுடன் கூட்டுச் சேர்ந்ததினால் யோசபாத் இப்பொழுது ஆபத்திற்கு அருகாமையில் இருந்தான், எதிரிகளின் இலக்குக்கு…

December

துல்லியமான தாக்குதல்

2024 டிசம்பர் 22 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,31)  “சீரியாவின் ராஜா … நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்” (வசனம் 31). சீரியா ராஜாவின் இலக்கு மிகவும் துல்லியமானது. அரசனை முதலாவது தாக்குவோம், தலைமையற்ற அவனது வீரர்கள் சிதறி ஓடிவிடுவார்கள் என்னும் உத்தியைக் கடைப்பிடித்தான். “இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்” என்று இந்தக் காரியத்தைக் குறித்து கர்த்தர் மிகாயாவுக்கு வெளிப்படுத்தி அதை ஆகாபுக்கு…