August

நம்மோடு பேசுகிற கடவுள்

2024 ஆகஸ்ட் 11 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,8) “அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று” (வசனம் 8). எப்பொழுது? நீர் வற்றிப்போகும்வரை அவன் காத்திருந்தபொழுது. எலியா அடுத்த கர்த்தருடைய வார்த்தை தனக்கு வரும்வரை கேரீத் ஆற்றண்டையிலேயே காத்திருந்தான். நாம் இருக்கிற இடம் கர்த்தரால் அனுமதிக்கப்பட்ட இடம் என்று தெளிவாகத் தெரியுமானால், அந்த இடத்திலேயே நிலைத்திருக்க வேண்டும்.  “அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன்” (1 கொரிந்தியர் 7,20) என்று பவுல் அறிவுறுத்துகிறார். இப்பொழுது கர்த்தர்…

August

குறைவுகளில் கர்த்தரை அனுபவித்தல்

2024 ஆகஸ்ட் 10 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,7) “சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று” (வசனம் 7). கேரீத் ஆற்றின் நீர் வற்றிப்போயிற்று என்று எழுதப்பட்டுள்ளதே தவிர, காகங்கள் அன்றாடம் இறைச்சியும் அப்பமும் கொண்டுவரவில்லை என வாசிக்கிறதில்லை. அப்பத்தையும் இறைச்சியையும் உண்டு, தண்ணீரல்லாமல் உயிர் வாழ முடியுமா? நிச்சயமாக முடியாது. இஸ்ரவேல் மக்களுக்குப் பாலைவனத்தின் கற்பாறையிலிருந்து தண்ணீர் வரவழைத்த தேவனால், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிம்சோனின் ஜெபத்தைக் கேட்டு, பாறையைப் பிளந்து தண்ணீர் வரவழைத்த தேவனால்…

August

சார்ந்துகொள்ளும் இடம்

2024 ஆகஸ்ட் 9 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,7) “தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று” (வசனம் 7). தேவன் எலியாவுக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதன் வெளிப்பாடே ஆற்றின் நீர் வற்றிப்போகுதல். ஒரு காரியத்துக்காக நாம் ஜெபிக்கும்போது, அதன் நிறைவேறுதலை நாமே உணராவிட்டால் வேறு யார் உணர முடியும்? ஆகவே தேவனுடைய வல்லமையையும் அவரது அதிசயங்களையும் நாம் விளங்கிக்கொள்வதற்காக சில தட்டுப்பாடுகளை அனுமதிக்கிறார்.  பாடுகள், இழப்புகள், துன்பங்கள் ஆகியவற்றின் வாயிலாகவே ஆவிக்குரிய வாழ்வின்…

August

மறைவான இடம்

2024 ஆகஸ்ட் 8 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,4 முதல் 6 வரை) “காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்” (வசனம் 6). அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் எலியாவிடம் கூறினார் (வசனம் 4). வறட்சியான காலத்தில் ஆறுகளும், பஞ்ச காலத்தில் ஆகாயத்துப் பறவைகளும் தேவனுடைய இறையாண்மையின் கட்டுப்பாட்டுக்குள்ளும், அவரது ஆளுகைக்குள்ளும் இருக்கின்றன…

August

மறைவான ஊழியம்

2024 ஆகஸ்ட் 7 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,2 முதல் 3 வரை) “நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு” (வசனம் 3). ஆகாபுக்கு முன்பாக தனது வார்த்தையை அறிவித்த பின்னர், தேவன் தம்முடைய ஊழியக்காரனை கேரீத் ஆற்றண்டையில் ஒளிந்துகொண்டு யாருக்கும் தெரியாவண்ணம் மறைந்திரு என்று கட்டளையிடுகிறார். எலியா எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தைக் கர்த்தர் தெளிவாக அறிவிக்கிறார். “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல்…

August

கருத்துள்ள ஜெபம்

2024 ஆகஸ்ட் 6 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,1) “கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்” (வசனம் 1). இஸ்ரவேல் நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான நேரத்தில் எலியா தீர்க்கதரிசி திடீரென்று தோன்றினான். ஆகாப் ராஜாவின் துரோக ஆட்சியின் இருண்ட காலங்களில் ஓர் ஆன்மீக விடிவெள்ளியாக எலியா…

August

தந்தையின் சகோதரன்

2024 ஆகஸ்ட் 5 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 16,29 முதல் 34 வரை) “உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்” (வசனம் 30). இஸ்ரவேல் நாட்டில் ஆட்சி புரிந்த மன்னர்களிலேயே மிகவும் ஒரு மோசமான ஒருவனைப் பற்றி படிக்கிறோம். இவன்தான் ஆகாப். இவன் ஆட்சிக்கு வந்த நாள் தொடங்கி, பத்துக் கட்டளைகளின் முதல் இரண்டு கட்டளைகளை பகிரங்கமாக மீறினான். சிதோனியரின் இளவரசி விக்கிரக ஆராதனையையே தன் மூச்சாகக் கொண்டிருந்த…

August

மிகவும் பொல்லாதவன்

2024 ஆகஸ்ட் 4 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 16,21 முதல் 28 வரை) “உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்” (வசனம் 23). இஸ்ரவேல் நாட்டின் மக்கள் இரண்டாகப் பிளவுபட்டார்கள். ஒரு சாரார் திப்னி என்பவனை ராஜாவாக்க முயன்றனர், இன்னொரு சாரார் உம்ரியை ராஜாவாக்க முயன்றனர். இரு குழுவினருக்கும் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நடைபெற்ற போரில் திப்னி குழுவினர் தோற்கடிக்கப்பட்டனர், இறுதியில் திப்னி இறந்துபோனான். “உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில்…

August

ஏழு நாள் அரசன்

2024 ஆகஸ்ட் 3 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 16,15 முதல் 20 வரை) “யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாள் ராஜாவாயிருந்தான்” (வசனம் 15). பொருளாசையைப் போலவே பதவி ஆசையும் மிகவும் மோசமானது. சிம்ரி என்பவனுக்கு இஸ்ரவேலின் நாற்காலியின்மீது ஆசை வந்தது. இவன் பாஷாவின் மகன் ஏலாவைக் கொன்று நாற்காலியில் அமர்ந்தான். மொத்தம் ஏழு நாட்கள் மட்டுமே அவனால் ஆட்சி செய்ய முடிந்தது. மிகக்குறுகிய கால ஆட்சி. இஸ்ரவேலின் கெட்ட ராஜாக்களின்…

August

வழிவழியாய்…

2024 ஆகஸ்ட் 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 16,8 முதல் 14 வரை) “யூதாவின் ராஜாவான ஆசாவின் இருபத்தாறாம் வருஷத்திலே பாஷாவின் குமாரனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருஷம் அரசாண்டான்” (வசனம் 8). பாஷா மரித்த பின் அவனுடைய மகன் ஏலா ஆட்சிப் பதவியை ஏற்றான். தந்தையைப் போல மகன் என்னும் பழமொழிக்கு ஏற்பவே இவனுடைய ஆட்சியும் இருந்தது. பாஷா விதைத்ததை இவன் அறுவடை செய்தான். விக்கிரகங்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும்…