விசுவாசமும் கீழ்ப்படிதலும்
2024 ஆகஸ்ட் 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,13) “அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே” (வசனம் 13). எலியா உதவிதேடி சீதோனுக்கு வந்தான். ஆனால் இந்தப் பெண்ணின் நிலைமையோ தன்னைக் காட்டிலும் மோசமானதாக இருக்கிறதைக் கண்டுகொண்டான். இங்கே எலியாவுக்கு மட்டுமின்றி, அந்தப் பெண்ணுக்கும் அவள் மகனுக்கும் உதவி தேவைப்படுகிறது. எலியா கேரீத் ஆற்றண்டையில் கர்த்தருடைய பராமரிப்பை அனுபவித்தவன். இனிவரும் காலங்களிலும் தன்னைப் போஷிப்பார் என்னும் நம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஆனால் இந்த விதவையைக் குறித்து…