கிறிஸ்துவைப் பிரதிபலித்தல்
2024 ஆகஸ்ட் 31 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,19) “அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி…” (வசனம் 19). நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் ஊழியம் செய்த நாட்களில், தம்முடைய சீடர்களிடம், மக்கள் என்னை யார் என்று கூறுகிறார்கள் என்று கேட்டார். “அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்”…