இருமுறை பேசுகிற தேவன்
2024 அக்டோபர் 22 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19:7) “கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்” (வசனம் 7). கர்த்தருடைய தூதன் இரண்டாம் முறை வந்து, எலியாவைத் தொட்டு எழுப்பினான். நாம் சோர்ந்துபோனாலும், தேவனோ அவரால் ஏற்படுத்தப்பட்ட பணியை நாம் முடிக்கும் வரைக்கும் தொடர்ந்து நம்மை உயிர்ப்பித்து எழுப்பிவிடுகிறவராக இருக்கிறார். “உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருக்கிறவர்”…