மீண்டும் பொறுப்பு
2024 நவம்பர்1 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 19,15) “அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய் ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி …” (வசனம் 15). எலியாவின் மனக்குழப்பத்திற்கு மருந்து அவனைப் பணி செய்ய வைப்பதே என்று கர்த்தர் உணர்ந்தார் என்று தெரிகிறது. நாமும்கூட சோம்பிக்கிடக்கும்போது பல்வேறு எதிர்மறை சிந்தனைகளால் ஆட்கொள்ளப்படுவோம். ஆகவே கர்த்தர் அவனுக்கு மறுபடியும் வேலையைக் கொடுத்தார். அவர் அவனை ஒரு நீண்ட பயணத்துக்கு ஏற்பாடு செய்தார். சீரியா…