சோதனையை எதிர்கொள்ளுதல்
2024 நவம்பர் 11 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,11 முதல் 15 வரை) “அதற்கு இஸ்ரவேலின் ராஜா பிரதியுத்தரமாக: ஆயுதம் தரித்திருக்கிறவன், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டலாகாது என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றான்” (வசனம் 7). ஆகாப் பெனாதாத்துக்கு ஞானமான ஒரு பதிலைச் சொல்லி அனுப்பினான். “ஆயுதம் தரித்திருக்கிறவன், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டலாகாது” என்பதே அந்த ஞானமுள்ள வார்த்தைகள். அதாவது போர் இன்னும் தொடங்கவேயில்லை, அதற்குள் வெற்றி பெற்றவனைப் போல வெற்றியைக் கொண்டாட வேண்டாம்…