சரியான புரிதல் தேவை
2024 நவம்பர் 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 20,30 முதல் 31) “அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்” (வசனம் 31). இஸ்ரவேல் மக்களுக்கு எதிரான போரில், பெனாதாத் புறமுதுகிட்டு ஓடி, ஆப்பெக் நகரத்திற்குள் புகுந்து, ஓர் உள்ளறையிலே பதுங்கிக் கொண்டான். தேவனைப் பற்றிய எதிர்மறை எண்ணத்துடன் தேவனுடைய மக்களுக்கு எதிராகப் போடுகிற குறுகிய பார்வை கொண்ட தேவனற்ற அரசர்களின் முடிவு இவ்வாறாகத்தான் இருக்கும்…