ஸ்தாபிதமும் பெலனும்
2024 மே 25 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 7,13 முதல் 22 வரை) “அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலது புறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான்” (வசனம் 1). மோசே ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டும்போது, அதற்கு வேண்டிய வெண்கல வேலைகளைச் செய்வதற்கு பெசலெயேல் என்னும் ஒரு மனிதனை ஆவியானவர் எழுப்பினார். “அவன் விநோதமான வேலைகளை யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும்,…