June

நேரத்தைக் குறைக்க வேண்டாம்

2024 ஜூன் 14 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:62-66) “நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழு நாளும், அதற்குப்பின்பு வேறே ஏழு நாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்” (வச. 65). சாலொமோன் தேவாலயப் பிரதிஷ்டையை கூடாரப் பண்டிகையின் நாட்களில் நடத்தினான். பொதுவாக ஏழு நாட்கள் நடைபெறும் கூடாரப் பண்டிகை, இந்த முக்கியமான சமயத்தில் பதினான்கு நாட்களாக நீடித்தது (உபா. 16:13-17; வசனம் 65). நீட்டப்பட்ட காலம் மட்டுமின்றி, செலுத்தப்பட்ட பலிகளின் மிகுதியும் அதாவது பலியிடப்பட்ட…

June

உண்மையுள்ள தேவன்

2024 ஜூன் 13 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:55-61) “அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை” (வச. 55). விசுவாசிகளின் உரையாடல்களில் எப்பொழுதும் இடம்பெறக்கூடிய ஒரு முக்கியமான பொருள் இருக்குமாயின் அது கர்த்தருடைய உண்மைத் தன்மையைக் குறித்ததாகும். அவர் இஸ்ரவேல் மக்களுக்காக என்னவெல்லாம் செய்வேன் என்று மோசேயிடம் சொல்லியிருந்தாரோ அது முற்றிலும் நிறைவேறிற்று. அதை சாலொமோன் நினைவுகூர்ந்து மக்களிடம் தெரிவித்தான் (வச. 56). மோசேயின் சீடன் யோசுவாவும் தன்னுடைய…

June

தாழ்மையின் மேன்மை

2024 ஜூன் 12 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:54) “அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததை விட்டெழுந்து” (வச. 54). சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து தன்னுடைய ஜெபத்தைத் தொடங்கினான் (வசனம் 22). ஆனால் அவன் தன்னுடைய நீண்ட ஜெபத்தை முடிக்கும்போது, “முழங்கால்படியிட்டிருந்ததை விட்டெழுந்தான்” (வசனம் 54) என்று வாசிக்கிறோம். தம்முடைய மக்களுக்காக ஏறெடுத்த ஜெபம் கேட்கப்படும்படியாய் ராஜாவாகிய…

June

இரக்கத்தின் மேன்மை

2024 ஜூன் 11 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:44-53) “பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே” (வச. 46). இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும் போது, அவர்கள் இந்த ஆலயத்தை நோக்கி ஜெபித்தால் அவர்களுக்கு வெற்றி தரும்படி சாலொமோன் விண்ணப்பம் பண்ணினான். இங்கே நாம் கவனிக்க வேண்டிய காரியம் “நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியில்” (வசனம் 44) என்ற சொற்றொடர் ஆகும். எல்லா இடங்களிலும் எல்லாப் போர்களிலும் அல்ல, கர்த்தர் எங்கே அனுப்புகிறாரோ அங்கே வெற்றியைத் தரும்படி…

June

சபையின் சாட்சி

2024 ஜூன் 10 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:41-43) “அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூரதேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால்” (வச. 42). நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக் கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக (வசனம் 43) என்று சாலொமோன் ஜெபம் செய்தான். அதாவது இஸ்ரவேல் அல்லாத புறஇன மனிதர்களுக்காகவும் இவன் ஜெபித்தான். ஆண்டவரும் தமது…

June

தேவசமூகத்தின் முக்கியத்துவம்

2024 ஜூன் 9 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:31-40) “பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்கள் பிதாக்களுக்கு நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக” (வச. 34). நாம் அனைவருமே ஆதாமின் பாவத்தால் வந்த சுபாவத்தைப் பெற்றிருக்கிறோம். இரட்சிக்கப்பட்ட பிறகும் இந்தச் சுபாவம் நம்மை விட்டு முற்றிலுமாகப் போய்விடவில்லை. ஆகவே பல தருணங்களில் நாம் வீழ்ச்சியைச் சந்திக்கிறோம். ஆயினும் கர்த்தர் நாம் மீண்டும் எழவும், நம்மைப் புதுப்பித்துக்கொள்ளவும் ஏற்ற வழிகளை…

June

ஜெபவீடாகிய தேவனுடைய வீடு

2024 ஜூன் 8 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:28-30) “என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்” (வச. 28). இந்த வேதபகுதி ஜெபத்தைப் பற்றிய சில முக்கியமான உண்மைகளை நமக்குப் போதிக்கிறது. தேவனுடைய நாமம் விளங்குவதற்காக கட்டப்பட்ட ஆலயத்தை சாலொமோன் ஜெபவீடாக்கினான். இங்கிருந்து அவன் ஜெபித்தது மட்டுமின்றி, வருங்காலங்களில் மக்கள் ஜெபிக்க வருகிற இடமாகவும் மாற்றினான். ஒரு புதிய…

June

கடவுளின் மாபெரும் தன்மை

2024 ஜூன் 7 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:27) “தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?” (வச. 27). இந்த வசனத்தின் மூலம் சாலொமோன் ஓர் உண்மையைத் தெரியப்படுத்தினான். அவன் கட்டிய ஆலயத்தில் கர்த்தருடைய சிறப்பான பிரசன்னம் இருந்தபோதிலும், அவர் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கமுடியாதவரும், கட்டுப்படுத்தப்பட முடியாத அளவுக்கு பெரியவருமாக இருக்கிறார் என்பதை அங்கீகரிப்பதே அது. மகா பெரிய கடவுள் நம்முடைய சிறிய…

June

வாக்கு மாறாத கர்த்தர்

2024 ஜூன் 6 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:23-26) “தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்” (வச. 24). “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை” (வசனம் 23) என்னும் புகழ்ச்சியோடு தன்னுடைய மன்றாட்டைத் தொடங்கினான். கர்த்தர் தனித்துவமானவர் மட்டுமின்றி, அவருக்கு நிகரானவர் வானத்திலும்பூலோகத்திலும் வேறு ஒருவரும் இலர் என்பதை தாவீது உணர்ந்திருந்தான். அதாவது வேறு எந்தக் கோள்களினாலும் சரி, அல்லது…

June

ஜெபம் என்னும் தூபம்

2024 ஜூன் 5 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 8:22) “பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து” (வச. 22). சாலொமோன் கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னாக, இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து ஜெபிக்கத் தொடங்கினான். பலிபீடம் பலி செலுத்தும் இடம், அதற்கு முன்பாக நின்று கைகளை விரித்து, வானத்தை நோக்கிப் பார்த்து ஆண்டவரிடம் மன்றாடினான். பலிபீடத்தின் வாயிலாக நாம் ஆண்டவரிடம் நெருங்கிச்…