June

பாக்கியவான்கள்

2024 ஜூன் 24 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 10:6-8) “இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்” (வச. 7). சேபாவின் அரசி, சாலொமோனின் ஞானத்தைப் பற்றியும் அவனது செயல்களைப் பற்றியும் கேள்விப்பட்ட செய்திகள் யாவும் நேரில் வந்தபோது உண்மையென கண்டுகொண்டாள். அவளது ஆர்வமும் பிரயாசமும் சாலொமோனை கூடுதலாக அறிந்துகொள்ளச் செய்தன. நாம் இரட்சிக்கப்படும்போது, ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு குழந்தையாகத் தொடங்குகிறோம். நாளாக நாளாக நாம் வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் நோக்கிப் பயணிக்கிறோம். நம்மிடத்திலும் ஆர்வமும் உற்சாகமும் இருக்குமானால்…

June

விசுவாசித்து அறிந்துகொள்ளுதல்

2024 ஜூன் 23 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 10:4-5) “சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும்,… கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,” (வச. 4,5). கர்த்தர் சாலொமோனுக்கு அருளிய ஞானத்தையும், அந்த ஞானத்தால் விளைந்த சகல திறமையான காரியங்களையும், அவனுடைய ஐசுவரியத்தையும் சேபாவின் ராஜஸ்திரீ கண்டபோது ஆச்சரியத்தால் நிறைந்து என்ன பேசுவது என்று தெரியாமல் பிரமை கொண்டவளைப் போல ஆனாள். இப்படியிருக்க சாலொமோனுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்த கர்த்தருடைய ஞானம் எவ்வாறு இருக்கும்?…

June

ராஜாவுடன் தனிப்பட்ட நெருக்கம்

2024 ஜூன் 22 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 10:2-3)   “அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான், அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை” (வச. 3). பூமியினுடைய தென் திசையின் கடைசி எல்லையிலிருந்து, அதாவது இஸ்ரவேல் நாட்டிற்கு தெற்குப் பகுதியில் இருக்கிற தூரமான நாட்டிலிருந்து சேபா நாட்டின் ராஜஸ்திரீ, சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்டு, அவனோடு உரையாட வேண்டும், அவனைக் காண வேண்டும் என்னும் ஆவலில் அவனைத் தேடி வந்தாள். சாலோமோனிலும் பெரியவரோ பரலோகத்திலிருந்து நம்மைத்…

June

நற்செய்தி அறிவித்தல்

2024 ஜூன் 21 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 10:1-3) “கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது” (வச. 1). சாலொமோனின் புகழ் அன்றைக்கு அறியப்பட்டிருந்த நாடுகளுக்கெல்லாம் பரவியது. கர்த்தர் அருளிய தெய்வீக ஞானத்தால் அவன் நாட்டை நிர்வகித்த திறனையும், வளர்ச்சியையும் செழிப்பையும் கண்ட மக்களும், வணிகர்களும் அவனைப் பற்றிய செய்தியை உலகின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தனர். ஒரு விசுவாசிக்கு கர்த்தருடைய நாமத்திற்கு அப்பாற்பட்டு எந்தவொரு புகழ்ச்சியும் கீர்த்தியும் இல்லை. இயேசு நாதரைச் சுமந்த…

June

ஆத்துமாவைக் காத்துக்கொள்ளுதல்

2024 ஜூன் 20 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 9:15-28) “பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்” (வச. 15). சாலொமோன் ஒரு மாபெரும் கட்டடப் பொறியாளர் மட்டுமின்றி, ஒரு சிறந்த நிர்வாகியாகவும் விளங்கினான். இந்த நிர்வாகத் திறமையால் தன்னுடைய ராஜ்யத்தைப் பலப்படுத்தினான். அவனுடைய ஆட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழ்ந்த இஸ்ரவேலர் அல்லாத பூர்வீகக் குடிமக்களைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள அறிந்திருந்தான்.…

June

உதாரத்துவமான பங்களிப்பு

2024 ஜூன் 19 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 9:10-14) “தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்” (வச. 11). தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதுக்கும் சாலொமோனுக்கும் உற்ற நண்பனாக விளங்கினான். ஆலயம் கட்டுவதற்கும், அரண்மனைகள் கட்டுவதற்கும் தேவையான மரங்களை தனது நாட்டிலிருந்து சாலொமோனுக்கு தாராளமாக அனுப்பி வைத்து உதவினான். சாலொமோன் இதற்கு கைமாறாக தன்னுடைய நாட்டிலிருந்த இருந்த இருபது பட்டணங்களை ஈராமுக்கு வெகுமதியாக வழங்கினான். சாலொமோனின் இந்தச் செயல் நல்லதன்று.…

June

சிட்சையின் ஆயுதம்

2024 ஜூன் 18 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 9:6-9) “நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி” (வச. 6). பின்வாங்கிப் போகுதல் கர்த்தருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் நேரிடுகிற ஒரு துக்கமான நிகழ்வாகும். ஏதோ சில காரணங்களால் ஒரு கர்த்தருடைய பிள்ளை அவரோடுள்ள ஐக்கியத்தை விட்டு விலகிச் செல்வதே பின்மாற்றம் ஆகும். கர்த்தரைப் பின்பற்றுவதை நிறுத்துவதையோ அல்லது இடையில் நின்றுவிடுவதையோ பின்மாற்றம் எனலாம். இச்சமயங்களில் ஒரு விசுவாசி கர்த்தருடைய சமூகத்தின் ஐக்கியத்தையும் இரட்சிப்பின் சந்தோஷத்தையும் இழந்துபோகிறான். நாம் இந்தப்…

June

கிருபையைப் பற்றிக்கொள்ளுதல்

2024 ஜூன் 17 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 9:4-5) “உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால்” (வச. 4). கர்த்தர் சாலொமோனுக்குத் தரிசனமாகி, அவனுக்குப் பதில் அளித்தபோது, அவன் தொடர்ந்து அவருடைய ஆசீர்வாதத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு சில நிபந்தனைகளையும் விதித்தார். பழைய உடன்படிக்கையில் ஆசீர்வாதங்கள் ஒவ்வொன்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்வதை அடிப்படையாகக் கொண்டது. ஆயினும் அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதைக் குறித்து ஒரு சர்வாதிகாரியைப் போல தேவன் நடந்துகொள்ளாமல், ஒரு கிருபையுள்ள தகப்பனைப் போலவே இஸ்ரவேல் மக்களிடத்தில் நடந்துகொண்டார் என்பதையும்…

June

பதில்பெறும் பாக்கியம்

2024 ஜூன் 16 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 9:3-5) “கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்” (வச. 3). சாலொமோன் பரலோகத்தின் தேவனை நோக்கி ஒரு நீண்ட ஜெபத்தை ஏறெடுத்தான். இதனாலேயே அது சிறந்த ஜெபமாக மாறிவிடுவதில்லை. மாறாக, “நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்” என்று கர்த்தர் பதில் அளித்ததினாலேயே அது சிறந்த ஜெபமாகக் கருதப்படுகிறது. நீண்ட ஜெபமோ அல்லது…

June

புதிய தரிசனம், புதிய உற்சாகம்

2024 ஜூன் 15 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 9:1-2) “கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார்” (வச. 2). சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தனக்கான அரண்மனைகளையும், தான் செய்ய வேண்டும் என்று விரும்பிய அனைத்தையும் கட்டி முடித்தபோது, கிபியோனிலே தரிசனமானதுபோல இரண்டாந்தரம் கர்த்தர் அவனுக்கு தரிசனமானார். இதற்குள்ளாக ஏறத்தாழ அவனுடைய ஆட்சிக் காலத்தில் இருபத்தினான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆட்சிக்கு வந்த தொடக்க காலத்தில் தரிசனமான தேவன், அவன் தன் வேலைகளையெல்லாம் முடித்த தருணத்திலும் தரிசனமானார்.…