மாயம்பண்ண வேண்டாம்
2024 டிசம்பர் 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 22,29 முதல் 30 வரை) “பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்” (வசனம் 29). தீர்க்கதரிசி மிகாயாவின் எச்சரிப்புக்குச் செவிகொடுப்பதற்கு ஆகாபின் பெருமையும் கௌரவமும் இடங்கொடுக்கவில்லை. இவன் தீர்க்கதரிசியின் முன்னுரைப்பை தன் சொந்தத் திறமையால் பொய்யாக்க விரும்பினான். “தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது” (ரோமர் 13,1) என்பதை அவன் மறந்துவிட்டான். பிரசங்கியார்கள் அல்லது நமது திருச்சபையின் போதகர்கள்…