July

அன்பும் கோபமும்

2024 ஜூலை 4 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,10) “அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்” (வசனம் 10). சாலொமோன் ஆலயத்தைக் கட்டி, அதைப் பிரதிஷ்டை செய்தபோது, கர்த்தர் தம்முடைய மகிமையால் அதை நிரப்பினார். தன்னுடைய நாமம் விளங்கும் ஸ்தலமாக அதைத் தெரிந்துகொண்டார். இதன் மூலமாக பூமியெங்கிலும் தான் ஒருவரே மெய்யான தேவன் என்பதை அறியச் செய்தார். மேலும் சாலொமோனுக்கு அவர் அருளிய ஞானத்தின் வாயிலாகவும் பூமியிலுள்ள ராஜாக்கள் அனைவரும் இவ்வுண்மையைப் புரிந்துகொண்டார்கள். ஆனால்…

July

கீழ்ப்படியாத இருதயம்

2024 ஜூலை 3 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,9) “அவன் (சாலொமோன்) கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,” (வசனம் 9). கர்த்தர் சாலொமோனுக்கு ஏற்கெனவே இரண்டு முறை தரிசனமாகியிருந்தார் (வசனம் 9). முதல் முறை அவன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தொடக்க காலத்திலும், இரண்டாம் முறை அவன் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்ட சமயத்திலும் கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகியிருந்தார். இவ்விரண்டிலும், என் கட்டளைகளையும், என் நியமங்களையும் கைக்கொண்டு என் வழிகளில் நடக்க வேண்டும் என்றும், வேறே…

July

உத்தமமான இருதயம்

2024 ஜூலை 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,4 முதல் 8 வரை) “அதினால் அவனுடைய (சாலொமோனுடைய) இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை” (வசனம் 4). “சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்” (வசனம் 4). சாலொமோனுக்கு வயதான போது, அவனுடைய மனைவிகள் அவனுடைய இருதயத்தை தங்களுடைய கடவுள்களின் பக்கம் திருப்பினார்கள். சாலொமோன் இளமையில் புத்திசாலியாக விளங்கினான். ஆனால் அவனுடைய வயது…

July

வழுவிப்போகாத இருதயம்

2024 ஜூலை 1 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,1 முதல் 3 வரை) “அவனுக்கு (சாலொமோனுக்குப்) பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்” (வசனம் 3). “விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” (நீதிமொழிகள் 16,18) என்று சாலொமோன் தான் சொன்ன பிரகாரமே கர்த்தர் அருளிய ஆசீர்வாதங்களால் மனமேட்டிமை அடைந்தான். இங்கே சாலொமோன் கர்த்தருடைய கற்பனைகளுக்கு மாறாக இரண்டு தவறுகளைச் செய்தான். ஒன்று, கர்த்தரால் தடைசெய்யப்பட்ட அந்நிய பெண்களை…

June

திருப்தியுள்ள வாழ்க்கை

2024 ஜூன் 30 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 10,26 முதல் 29 வரை) “எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்” (வசனம் 27). எருசலேமில் வெள்ளி கற்களைப் போலவும், கேதுருமரங்கள் பள்ளத்தாக்குகளில் இருக்கிற காட்டத்தி மரங்களைப் போலவும் மிகுதியாக இருந்தன என்னும் வார்த்தைகள் சாலொமோனின் செல்வச் சிறப்பைப் பறைசாற்றும் வார்த்தைகளாகும். சாலைகளில் வெள்ளிப் பாளங்கள் கொட்டிக் கிடந்தன என்று நாம் இதை அர்த்தப்படுத்தக்கூடாது. மாறாக, கற்கள் எவ்வளவு மலிவாகவும் மிகுதியாகவும்…

June

பணிந்துகொள்ளும் வாழ்க்கை

2024 ஜூன் 29 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 10,24 முதல் 25 வரை) “சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்” (வசனம் 24). சாலொமோனின் இருதயத்தில் தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக பூமியிலுள்ள சகல அரசர்களும் அவனுடைய பிரசன்னத்தை நாடிவந்தார்கள். அதாவது அவன் சகல ராஜாக்களைக் காட்டிலும் சிறந்தவனாகவும், மேலானவனாகவும் விளங்கினான். இது கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கென அளித்த, “இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய…

June

ஞானமுள்ள வாழ்க்கை

2024 ஜூன் 28 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 10,23) “பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்” (வசனம் 23). கர்த்தரோடுள்ள தொடர்பு சாலொமோனை இந்தப் பூமியிலுள்ள பிற ராஜாக்களைக் காட்டிலும் சிறந்தவனாக மாற்றியது. கர்த்தரோடுள்ள தொடர்பு தானியேலையும், அவனுடைய மூன்று நண்பர்களையும் பாபிலோன் ராஜ்யத்தில் சிறந்தவர்களாக மாற்றியது. “இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்” (தானியேல் 1,17). “பேதுருவும் யோவானும் படிப்பறியாதவர்களாயிருந்தாலும் அவர்கள் இயேசுவுடனேகூட…

June

மகிமையுள்ள வாழ்க்கை

2024 ஜூன் 27 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 10,14 முதல் 22 வரை) “ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது” (வசனம் 15). சாலொமோன் அரியணைக்கு வந்த புதிதில், கர்த்தர் அவனுக்குத் தரிசனமானபோது, அவன் அவரிடத்தில் ஞானத்தைக் கேட்டான். அப்பொழுது அவர், “இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை” (1 ராஜாக்கள் 3,13) என்று வாக்களித்தார்.…

June

ஒப்புவித்தலின் வாழ்க்கை

2024 ஜூன் 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 10,10 முதல் 13 வரை) “அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்” (வசனம் 10). சேபாவின் ராஜஸ்திரீ ஏன் சாலொமோன் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்? இதற்கான பதிலை சாலொமோன் எழுதிய நீதிமொழிகளிலிருந்தே நாம் ஒருவாறு யூகித்துக்கொள்ள முடியும். அவன் “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்” (நீதிமொழிகள் 3,13) என்று எழுதிவைத்திருக்கிறான்.…

June

சாட்சியுள்ள வாழ்க்கை

2024 ஜூன் 25 (வேதபகுதி: 1 ராஜாக்கள் 10:9) “உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக” (வச. 9). சாலொமோனின் ஞானம், அவனது நிர்வாகத் திறமை, அவனுடைய அரண்மனையின் அழகு, வேலைக்காரர்கள், உணவு வகைகள், விருந்தோம்பல், நடைபெற்ற விவாதங்கள் ஆகிய எல்லாவற்றையும் கண்ட சேபாவின் ராஜஸ்திரீயின் கவனம் தேவனாகிய கர்த்தர் மீது திரும்பியது. இந்தப் பெண்மணி எருசலேமுக்கு சுற்றுலா வரவில்லை. இவளுக்கு ஞானத்தின்மீது நாட்டமும், அதை அறிந்துகொள்ள வேண்டும் என்னும்…