July

தேவனுடைய மனிதன்

2024 ஜூலை 14 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 13,1) “யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து, …” (வசனம் 1). யெரொபெயாம் பெத்தேலில் தான் உண்டாக்கிய பலிபிடத்தின் மீது ஏறி தூபங்காட்டுவதற்கு ஆயத்தமாக நின்றான். அவன் ஓர் ஆசாரியனாக இராதிருந்தும் துணிகரமாகப் பலிபீடத்தில் பலி செலுத்தும்படி ஏறினான். “வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்” (நீதிமொழிகள் 26,17) என்று…

July

பரீட்சைக்கு நில்லாத நவீனமுறைகள்

2024 ஜூலை 13 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 12,25 முதல் 33 வரை) “இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள்” (வசனம் 30). பத்துக் கோத்திரங்களுக்கு ராஜாவாகிய யெரொபெயாம் எப்பிராயீம் மலைகளில் சீகேம் என்னும் நகரத்தைக் கட்டி அதை தனது அரசாட்சியின் தலைநகராக்கினான். பின்னர் தன் ஆட்சியின் வெற்றியை நிரூபிக்க பெனுவேல் என்னும் நகரையும் கட்டினான். அவனது ஆட்சி முன்னேற்றத்தை நோக்கித் தொடங்கியது. அந்தோ பரிதாபம்! கர்த்தர் அவனுக்கு கிருபையாய்க்…

July

மெய்யான அரசர்

2024 ஜூலை 12 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 12,16 முதல் 24 வரை) “யூதா கோத்திரம் மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை” (வசனம் 20). சாலொமோனின் பாவத்தால் பத்துக்கோத்திரங்களை தேவன் யெரொபெயாமுக்குக் கொடுத்துவிட்டார். பாகப்பிரிவினைக்கும், அழிவுக்கும் பாவம் எப்போரும் ஒரு மிகச் சிறந்த தூண்டு சக்தியாகத் திகழ்கிறது. பாவத்துக்கு மூலகாரணமான சாத்தான் மக்களுக்குள் பிரிவினையை உண்டு பண்ணுகிறான். கர்த்தர் மட்டுமே பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து சமாதானத்தை உண்டுபண்ணுகிறார். ஆகவே நாம் பாவத்திற்கு விலகியிருக்க வேண்டும்.…

July

மெய்யான அரசர்

2024 ஜூலை 11 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 12,1 முதல் 15 வரை) “முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனைபண்ணி…” (வசனம் 8). சாலொமோனின் மகன் ரெகொபெயாம் அவன் தந்தையின் ஸ்தானத்தில் அரசனாகப் பதவியேற்றான். நாம் இந்த உலகத்தில் நிரந்தரமாக உயிரோடு இருக்கப்போவதில்லை. நாம் வகிக்கிற பதவியையோ, பொறுப்பையோ அல்லது சொத்துகளையோ நமக்குப் பின்வரும் சந்ததிக்கு விட்டுச் செல்கிறோம் என்பதே உண்மை. சாலொமோன் இந்தக்…

July

வாழ்வின் முடிவும் ஆசீர்வாதமும்

2024 ஜூலை 10 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,43) “சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்” (வசனம் 43). “உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப் பண்ணுவேன்” (3,14) என்று கர்த்தர் சாலொமோனிடம் கூறியிருந்தார். சாலொமோன் இந்தக் கட்டளையைக் கைக்கொள்ளாததால் நீடித்த ஆயுள்வரைக்கும் அவன் செல்லவில்லை. நமது வாழ்நாள் உலக மருத்துவம், உடற்பயிற்சி,…

July

பொறுப்பும் அதன் காலமும்

2024 ஜூலை 9 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,41 முதல் 42 வரை) “சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்” (வசனம் 42). சாலொமோனால் எழுதப்பட்ட நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு ஆகிய நூல்கள் தவிர, அவனது அன்றாட ராஜாங்க நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. அவன் செய்தவை அனைத்தும் சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என நாம் அறியவருகிறோம் (வசனம் 41). அவன் மூலமாக நமக்கு என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று ஆவியானவர்…

July

சிட்சையும் ஆசீர்வாதமும்

2024 ஜூலை 8 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,26 முதல் 39 வரை) “இப்படி நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; ஆகிலும் எந்நாளும் அப்படியிராது என்று சொன்னான்” (வசனம் 39). “சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான்” (வசனம் 26). ஆதாத் மற்றும் ரேசோன் என்னும் இரண்டு எதிரிகளை நாட்டிற்கு வெளியே இருந்து எழுப்பியதுமல்லாமல் உள்ளேயிருந்து யெரொபெயாம் என்னும் விரோதியையும் கர்த்தர்…

July

கீழ்ப்படியாமையும் எதிரிகளும்

2024 ஜூலை 7 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,23 முதல் 25 வரை) “எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்” (வசனம் 23). தேவன் சாலொமோனுக்கு எதிராக மற்றொரு எதிரியையும் எழுப்பினார். அவனுடைய பெயர் ரேசோன். இவனிமித்தமும் சாலொமோனின் தூக்கம் கெட்டு, சமாதானம் தொலைந்தது. இஸ்ரவேலின் தெற்குத் திசையிலிருந்து ஆதாத்  என்னும் விரோதியை கர்த்தர் அனுமதித்தது போல (வசனங்கள் 14-22), இப்பொழுது அதன் வடக்குப் பகுதியான சீரியாவிலிருந்து மற்றோர் எதிரியையும் கர்த்தர்…

July

கீழ்ப்படியாமையும் சிட்சையும்

2024 ஜூலை 6 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,14 முதல் 22 வரை) “கர்த்தர் ஏதோமியனாகிய ஆதாத் என்னும் ஒரு விரோதியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜகுலமானவன்” (வசனம் 14). சாலொமோன் ஒரு காலத்தில், “என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை” (1 ராஜாக்கள் 5,4) என்று அறிக்கையிட்டான். ஆனால் இப்பொழுது நிலைமை அவனுக்கு உவப்பானதாக இல்லை. அவன் அந்நிய தேவர்களைத் தொழுதுகொண்டு வழிவிலகிச் சென்றதால்,…

July

கீழ்ப்படிதலும் ஆசீர்வாதமும்

2024 ஜூலை 5 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 11,11 முதல் 13 வரை) “நான் (கர்த்தர்) உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்” (வசனம் 11). நியாயப்பிரமாணம் நிபந்தனையோடு கூடிய ஆசீர்வாதத்தையே வாக்குப்பண்ணுகிறது. அதைக் கைக்கொண்டால் ஆசீர்வாதம், அதைக் கடைப்பிடிக்காவிடில் அது சாபம். கர்த்தர் தாவீதுக்கு அருளிய வாக்குறுதியிலும் இதுவே பிரதிபலித்தது. தாவீதின் சந்ததியினர் கீழ்ப்படிந்தால் மட்டுமே,…