உண்மையுள்ளவனின் சிலாக்கியம்
2024 ஜூலை 24 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 14,10 முதல் 16 வரை) “யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமின் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான்” (வசனம் 13). கர்த்தர் அகியாவின் மூலமாக யெரொபெயாமுக்கும் அவன் சந்ததிக்கும் நேரிடப்போகிற அழிவை முன்னறிவித்தார். நாம் பாவம் செய்யும்போது, அது நமக்கு இனிமையாகத் தோன்றும், அதற்கான விளைவை அனுபவிக்கும்போதோ அது கசப்பானதாக இருக்கும். விக்கிரக ஆராதனை செய்கிறவன் கர்த்தருக்கு விரோதமாகப்…