எளியவர்களின் தேவன்
2024 ஆகஸ்ட் 13 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,9) “உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்” (வசனம் 9). எலியாவைப் போஷிக்க தேவன் தெரிந்தெடுத்த நபரைக் கவனிப்பது நமக்கு வியப்பாக இருக்கிறது. தேவன் தெரிந்துகொண்ட மனிதர் ஒரு பணக்கார வணிகரோ அல்லது சீதோனின் முக்கியமான ஒருவரோ அல்லர். அவள் ஓர் ஏழை விதவை. உலகத்தின் பலவீனமான மனிதர்களையும், அற்பமானவர்களையும் பயன்படுத்திக் கொள்வது தேவனுடைய வழியாக இருக்கிறது. எலியா கேரீத் ஆற்றண்டையில் இருந்தபோது,…