August

விசுவாச வாழ்வு

2024 ஆகஸ்ட் 23 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,15 முதல் 16 வரை) “அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்” (வசனம் 15). கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்து போவதும் இல்லை என்று எலியாவால் எவ்வாறு உறுதியாகச் சொல்ல முடிந்தது. அது கர்த்தருடைய வார்த்தையின்மீது கொண்டிருந்த அசைக்க முடியாத விசுவாசத்தால் ஆகும். எலியா சொன்னது நிறைவேறாவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும்? எலியா அல்ல,…

August

பொய்யுரையாத தேவன்

2024 ஆகஸ்ட் 22 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,14) “கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” (வசனம் 14). எலியா அந்த விதவையிடம், “கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை” என்று கூறினான். நாட்டில் ஏன் மழை பெய்யவில்லை? நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது ஏன்? ஏன் விளைச்சல் இல்லை? ஏன்…

August

விசுவாசமும் கீழ்ப்படிதலும்

2024 ஆகஸ்ட் 21 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,13) “அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே” (வசனம் 13). எலியா உதவிதேடி சீதோனுக்கு வந்தான். ஆனால் இந்தப் பெண்ணின் நிலைமையோ தன்னைக் காட்டிலும் மோசமானதாக இருக்கிறதைக் கண்டுகொண்டான். இங்கே எலியாவுக்கு மட்டுமின்றி, அந்தப் பெண்ணுக்கும் அவள் மகனுக்கும் உதவி தேவைப்படுகிறது. எலியா கேரீத் ஆற்றண்டையில் கர்த்தருடைய பராமரிப்பை அனுபவித்தவன். இனிவரும் காலங்களிலும் தன்னைப் போஷிப்பார் என்னும் நம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஆனால் இந்த விதவையைக் குறித்து…

August

கர்த்தர் பெரியவர்

2024 ஆகஸ்ட் 20 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,11 முதல் 13 வரை) “அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” (வசனம் 12). இஸ்ரவேலில் ஏற்பட்ட பஞ்சத்தின் தாக்கம் அண்டை நாடான சீதோனிலும் உணரப்பட்டது. மழை பெய்து ஓராண்டுக்குமேல் ஆனபோதிலும் அவளிடத்தில் எண்ணெய் கைவசம் இருந்தது ஆச்சரியமானதே. இதற்கும்கூட வேதமே சரியான பதிலைத் தருகிறது. யோசுவா…

August

முதலிடம் கர்த்தருக்குரியது

2024 ஆகஸ்ட் 19 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,11 முதல் 13 வரை) “அவன் (எலியா) அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்” (வசனம் 11). எலியாவின் இந்த வேண்டுகோள் நமது பார்வைக்குச் சற்று சுயநலமுள்ளதாகத் தோன்றலாம். ஆனால் தன்னைப் பராமரிக்கும்படி கர்த்தரால் நியமிக்கப்பட்ட பெண் இவளே என உறுதியான பின்னரே எலியா அப்பம் கொண்டுவரும்படி கூறினான். இந்த இடத்தில் எலியா கர்த்தருடைய பிரதிநிதியாக செயல்பட்டான். “அதற்கு அவள்:…

August

உண்மையை உரைப்போம்

2024 ஆகஸ்ட் 18 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,11) “(தண்ணீர்) கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்” (வசனம் 11). “அந்த விதவைப் பெண் தண்ணீர் கொண்டுவர போகிறபோது” என வாசிக்கிறோம். அவள் எவ்வித மறுப்புமின்றி, ஓர் அந்நிய மனிதனுக்கு தண்ணீர் கொண்டு வர எழுந்தவுடன், தன்னைப் பராமரிக்கும்படி கர்த்தரால் கட்டளையிடப்பட்ட பெண் இவளே என்று எலியா நிச்சயத்துக்கொண்டான். எலியாவின் தேடலும், கர்த்தருடைய…

August

உதவி செய்தலின் மேன்மை

2024 ஆகஸ்ட் 17 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,10) “அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்” (வசனம் 10). நகரத்தின் வாசலண்டையில் நின்றுகொண்டிருந்த பெண்ணே தான் தேடி வந்தவள் என்று எலியா எவ்வாறு அறிந்துகொள்வது? எனவே அவன் தனது உரையாடலை, “நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா” எனத் தொடங்கினான். ஆபிரகாமின் வேலைக்காரன் எலியேசர், ஈசாக்குக்கு பெண் தேடிப் போன…

August

உழைப்பின் மேன்மை

2024 ஆகஸ்ட் 16 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,10) “அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் (எலியா) வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்” (வசனம் 10). எலியாவுக்கு பஞ்ச காலத்தில் உணவு அளிக்கும்படி தேவன் இந்தப் பெண்ணைத் தெரிந்து கொண்டார். ஊரெல்லாம் உணவின்றி தவிக்கும்போது, இந்தப் பெண்ணிடம் மட்டும் எவ்வாறு உணவு கையிருப்பு இருக்கும். ஆகவே தேவன் ஓர் அற்புதத்தின் வாயிலாக எலியாவின் தேவையைச் சந்திக்கபோகிறார் என்பது உறுதி. அதே நேரத்தில் கர்த்தர் இந்தப்…

August

தேவனுடைய நேரங்கள்

2024 ஆகஸ்ட் 15 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,10) “அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்” (வசனம் 10). நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்று தேவன் எலியாவுக்குச் சொல்லியிருந்தார். ஆயினும் இந்த விதவை அந்தக் கட்டளையை அறியாதது போல் தோன்றியது. அவள் கர்த்தரால் அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசி வருவான் என ஆயத்தமாகவும்…

August

எளியோரைப் பயன்படுத்தும் தேவன்

2024 ஆகஸ்ட் 14 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,10) “அப்படியே அவன் (எலியா) எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்” (வசனம் 10). தேவன் கட்டளையிட்டபிரகாரம் எலியா ஏறத்தாழ நூற்றைம்பது கிலோ மீட்டர் பயணம் செய்து சாறிபாத்துக்குப் போனான். தேவனுடைய மக்கள் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது முழு வேதாகமத்திலும் அடிக்கடியாகச் சொல்லப்படுகிற ஒரு முக்கியமான காரியம். பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம். “உன் ஒரே மகனும், நேச குமாரனுமாகிய ஈசாக்கை நான் காண்பிக்கும் மலையில் பலியிடு” என்று…